எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. ? எந்த கட்சி சாதிக்கும்? வெளியானது கருத்துக் கணிப்பு.


இலங்கையில் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்ட நிலையில் அரசியல் மட்டத்தில் குழப்ப நிலை அடைந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என Lanka C News  சிங்கள ஊடாகம்  கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
 Source  : https://lankacnews.com/poll

கடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீங்கா சுந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சி இணைந்தால் இலகுவாக 58 வீத வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் 64 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று கொள்ள முடியும்.

 ஐக்கிய தேசிய கட்சி இணைந்தாலும், 32 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
JVP 6 %
TNA 3%

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு கட்சிகளும் முன்னாள் ஜனாதிபதியும் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷவே பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. ? எந்த கட்சி சாதிக்கும்? வெளியானது கருத்துக் கணிப்பு. எதிர்வரும் பொது தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. ? எந்த கட்சி சாதிக்கும்? வெளியானது கருத்துக் கணிப்பு. Reviewed by Madawala News on November 10, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.