ஒரு பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எவ்வாறு ?



ஒரு பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எவ்வாறு என பிரதமர்
செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வர ஆகக் குறைந்தது 20 உறுப்பினர்கள் கையொப்பம் இட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ORDER  BOOK இல் பதியப்பட்டு  நம்பிக்கையில்லா பிரேரணை பிரதிகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு 5 வேலை நாட்களுக்கு பின்னர் கட்சி தலைவர்கள் ஒன்று கூடி விவாதத்திற்கு ஒரு நாள் குறிக்க வேண்டும் எனவும்  அந்த நாளில் விவாதம் நடத்தப்பட்டு அது  ஹென்சாட் பன்னப்பட்டு   வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட்ட நம்பிக்கையில்லா பிரேரணையும் இதே பாணியில் தான் கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எவ்வாறு ? ஒரு பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எவ்வாறு ? Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.