நாளை கண்டியில், ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.


கண்டி The Young Friends அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு (Postmortem)
உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு’, நாளை  ஞாயிற்றுக்கிழமை (18.11.2018) கண்டி லைன் பள்ளிவாயிலில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில், பொலன்னறுவை பொது வைத்தியசலையின் சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் அமீன் இஸ்ஸத் விரிவுரையாளராக கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை குற்றவியல் சட்டத்திற்கமைய முஸ்லிம் ஜனாஸாக்களின் பிரதேச பரிசோதனையில் வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள், சிக்கல்களை தவிர்த்து ஜனாஸாக்களை துரிதமாக விடுவிப்பதற்கான பொறிமுறைகள், ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதன் நோக்கம் மற்றும் ஒருவர் மரணித்ததிலிருந்து நல்லடக்கம் வரை எழும் சட்ட சிக்கல்கல்களும் கடைபிடிக்க வேண்டிய சட்ட ஒழுங்குகளும் அதன் பொறிமுறைகள் போன்ற விடயங்களில் இதன்போது விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளது.

எனவே, பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஜனாஸா சங்க அங்கத்தவர்கள், வாலிபர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகநல அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பொருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

– நுஸ்கி முக்தார் –
நாளை கண்டியில், ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு. நாளை கண்டியில்,  ஜனாஸாக்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.