கல்வி முன்னேற்றக் கழகத்தின் 9ஆவது வருட பரிசளிப்பு விழா (EPO)


மல்வானை கல்விமுன்னேற்றக் கழகத்தால் மேல்மாகாணரீதியாக நடாத்தப்பட்ட மாதிரி
கல்விபொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் 04.11.2018 (ஞாயிற்றுக் கிழமை) அல்முபாறக் கனிஷ்ட வித்தியாலய கேட்போர்கூடத்தில் வெகு விமர்சையாக நடைபபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை வாமி நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெய்க் நஜ்மான் அவர்களும்,

கௌரவ அதிதிகளாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் கபூர் அவர்களும்

வரலாற்றில் முதல் தடவையாக கம்பஹா மாவட்டதில் வெளிநாட்டு சேவைகள் (SLOS) பரீட்சையில் சித்தி பெற்று வெளிநாட்டு அலுவல்கள் பணியகத்தில் உதவி பணிப்பாளராக கடமையாற்றும் ஷெய்க் பாதில் (நழீமீ) அவர்களும்

இலங்கை பாதுகாப்புபடையின் உயர் அதிகாரி வைத்தியர் ஜெனரல் சுமனபால அவர்களும்

இன்னும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

கடந்த 9 வருடங்களாக மேல்மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் இப்பரீட்சையில் இம்முறை மேல்மாகாணத்தை சேர்ந்த 40 பாடசாலைகளின் 1170 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

இம்முறை நீர்கொழும்பு, மினுவாங்கொட, திஹாரிய, கஹடோவிட, நாபவெல, மல்வானை, பாணதுறை, கொழும்பு ஊர்களை மையமாக கொண்டு 12 பரீட்சை நிலையங்களில் 6 வாரங்களாக கணிதம், விஞ்ஞானம், வரலாறு, தமிழ், வரலாறு, ஆங்கிலம் போன்ற 6 முக்கிய பாடங்களில் பரீட்சை நடாத்தப்பட்டது.

இம்முறை நடாத்தப்பட்ட பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்று

முதலாம் இடத்தை
மல்வானை அல்முபாறக் பாடசாலை மாணவி
பாதிமா ஹம்தா பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் இடம்
இல்மா பெண்கள் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவி
ஆயிஷா சித்தீகாவும்

மூன்றாம் இடத்தை
கொழும்பு மகளிர் பாடசாலையை சேர்ந்த
பாதிமா ஹனாவும்


4ஆம் இடத்தை
அல்முபாறக் பாடசாலையை சேர்ந்த
பாதிமா மர்யமும்

ஜந்தாம் இடத்தை
முகர்ரமா சர்வதேச பாடசாலையில் கற்கும் மாணவி
பாதிமா முப்ஸிராவும் பெற்றுக்கொண்டனர்.

இவர்கள் ஜவரும் அனைத்து பாடத்திலும் அதிசிறந்த (6A) புள்ளிகைள பெற்றவர்கள். இவர்கள் ஜவருக்கும் தலா 20,000 வீதம் பணப்பரிசும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.மேலும் மல்வானையில் ஊர்மட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த சுமார் 18 பேருக்கு கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் பரீட்சை தொடர்பிலான வீணான அச்சங்களை போக்குதல், அரசால் நடாத்தப்படும் சாதாரண தரப்பரீட்சைக்கு முன்னர் தமது பாடசாலை மாணவர்களின் நிலையை கண்டறிந்து அவர்களுக்கு விசேட பயிற்சிகைள வழங்கி சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடை செய்தல் போன்ற இலக்குகளை கொண்டு கடந்த 9 வருடமாக இம்மாதிரிப் பரீட்சை நடாத்ப்பட்டு வருகிறது.

தேசியரீதியில் அரசால் நடாத்தப்படும் சாதாரணதரப் பரீட்சையின் அதே முறைகளை கையாண்டு நடாத்தப்பட்டு. அதே முறையில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தின் மூலம் வெளியிடப்பட்டு இப்பரீட்சை நடாத்தப்படுகிறது.

நாடாளாவியரீதியில் இம்மாதிரிப் பரீட்சைக்கு பெரும் வரவேற்பு இருந்த போதும் பல பாடசாலைகள் இதனை தாங்கள் பாடசாலைகளுக்கும் பிரதேச மாணவர்களுக்கு நடாத்துமாறு கோரிவருகின்ற போதும். மட்டுப்படத்தப்பட்ட வளங்கள் காரணமாக மேல்மாகாண பாடசாலைகளுக்கு மாத்திரமே இப்பரீட்சை கடந்த 9 வருடங்களாக நடாத்தப்பட்டு வருகிறது.

தகவல்
ARM INAS
கல்வி முன்னேற்றக் கழகத்தின் 9ஆவது வருட பரிசளிப்பு விழா (EPO) கல்வி முன்னேற்றக் கழகத்தின் 9ஆவது வருட பரிசளிப்பு விழா (EPO) Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5