சாரதியின் நித்திரை ... பஸ் பாதையை விட்டு விலகி வயல் வெளிக்குள்.

-எப்.முபாரக் -
மொனராகலையிருந்து திருகோணமலைக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று சாரதியின் நித்திரை காரணமாக மூதூர் பச்சை நூல் பகுதியில் பாதையை விட்டு விழகி வயல் வெளிக்குள் சென்றுள்ளது.

இச்சம்பவம் இன்று அதிகாலை(8) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளை சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்க காரணமாக பஸ் வயல் வெளிக்குள் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் பாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் நித்திரை ... பஸ் பாதையை விட்டு விலகி வயல் வெளிக்குள். சாரதியின் நித்திரை ... பஸ் பாதையை விட்டு விலகி வயல் வெளிக்குள். Reviewed by Madawala News on November 08, 2018 Rating: 5