பெற்ற கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட வேண்டி இருந்ததால் தான் சென்ற ஆட்சியாளர் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார். ஆனால் நாம் படிப்படியாக கட்டி வருகிறோம்.


-ஜே.எம்.ஹபீஸ்-
2015ம் ஆண்டு முதல் பெற்ற கடனுக்கு வட்டியும் தவணைக்கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற
காரணத்திற்காகவே அன்றைய ஆட்சித் தலைவர் காலத்திற்கு முன் தேர்தலை நடத்தி ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார்.

ஆனால் அவர்கள் பெற்ற கடனுக்கான இன்று நாம் வட்டியைiயும் தவணைக்கட்டணத்தையும் செலுத்தி வருகிறோம்.

உள்ளுர் ஏற்றுமதி விவசாயத்தை ஊக்குவிப்பதன் ஊடாக 2025ம் ஆண்டில் கடனற்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றி அமைப்போம் என ஏற்றுமதி விவசாய மற்றும் சமூக நலன்புரி, ஆரம்பக்கைத் தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். (இன்று 18.10.2018)


பேராதனையில் நடைபெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் 45 வது வருடாந்த மகாநாடு மற்றும் கண்காட்சி என்பவற்றில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது-


ஏற்றுமதி விவசாய வருடாந்த மகாநாட்டில் சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், விவசாய ஆய்வலர்கள் எனப் பலதரப்பட்ட வர்களுடன் கருத்துப் பரிமாறும் ஒரு மேடை ஏற்படுத்தப்பட்டுள்ளதை  காண்கிறேன். எனது அமைச்சு ஆரம்பிககப்பட் போது வெறுமனே ஒரு பெயர் பலனை மட்டுமேதான் மாட்டப்பட்டிருந்தது. அதன் அன்றாட செலவுகளை சமாளிக்க கூடியளவு வருமானமே ஏற்றுமதியால் ஈட்டப்பட்டது. ஆனால் இன்று அது ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.


எனது அமைச்சின் மூலம் 16 வகையான பயிர்கள் பற்றி மட்டுமே கையாள முடியும் என்று அதிகாரிகள் ஆரம்பத்தில் என்னிடம் தெரிவித்தனர். எனவே நான் அவர்களிடம் கூறினேன் அப்படிக் கூற முடியாது என்று. ஏற்றுமதி செய்யக் கூடிய பயிர்கள் என்ன என்ன உள்ளனவோ அவை அனைத்தும் பற்றி கவனத்தில் கொள்ளும் ஒரு அமைச்சாக இதனை முன்னெடுக்க வேண்டும்.


அது முடியாது என்று யாரும் கருதுவதாயின் அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்வதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது என்று தெரிவித்தேன்.
இருப்பினும் காலப் போக்கில் நிலைமைகள் சீராகி இன்று பிரபலமான ஒரு அமைச்சாக மாற்றம் பெற்று வருகிறது.

அதாவது 2015ம் ஆண்டுக்கு முன் பெறப்பட்ட கடன் பழுவின் தாக்கம்  2015ன் பின்புதான் தெரிய ஆரம்பித்தது.

பெற்ற கடனுக்கான தவனைக்கட்டம் மற்றும் அதற்கான வட்டி என்பவற்றையும் செலுத்த வேண்டிய நிலை உணரப்பட்டது.

போதியளவு ஏற்று மதி வருமானம் இல்லாத காரணத்தால் வட்டியை மட்டுமே செலுத்தலாம். தவணைக்கட்டணத்தை செலுத்த முடியாது என்ற நிலை தோன்றியது. இதனால்தான் அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த ஆட்சியாளர்கள் உரிய காலத்திற்கு முன்பே தேர்தலை நடத்தி நலுவிச் சென்றனர்.

நாம் படிப்படியாக ஏற்றுமதியை அதிகரித்து தற்போது வட்டி மற்றும் தவணைக்கட்டனம் என்வற்றையும் சேர்த்து செலுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

13 வருடங்களாக இலாபம் ஈட்டப்படாத அமைச்சை 13 பில்லியன் ரூபா இலாபமீட்டும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

அடுத்த வருடமாகும் போது அதனை 50 பில்லியன் ரூபாய்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எமது அமைச்சின் கீழ் மற்றொறு திணைக்களமாக சமுக நலன் புரியும் உள்ளது. அதனைப் பொருத்தவரை பாரிய சேவைகள் நடந்துள்ளன.



இலங்கையில் வாழும் மக்களில் 26 இலட்சம் பேர் முதியவர்கள், 20 இலட்சம் பேர் சிறுவர்கள், 7 இலட்சம் பேர் விதவைகள், இதனை விட போதைக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள் இலட்சத்துக்கு மேல் உள்ளனர். பெரும் பாலனாவர்கள் தேசத்துக்கு சுமையான உள்ளனர். மற்றவரில் தங்கி வாழும் இவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. 'திரிய காந்தா' வேலைத்திட்டம் மூலம் பாரிய சேவை செய்யப்பட்டு வருகிறது.


இவை அனைத்தையும் விட நாம் 5500 ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இதனை குறைந்தது 10 000 ஆக உயர்த்தும் திட்த்தையும் மேற்கொண்டு வருகிறோம். இது வெற்றியளிக்கும் பட்சத்தில் மகாவலி திட்டத்திற்கு அடுத்த படியாக நாட்டிவுள்ள மிகப் பெரிய திட்டமாக இது உருவாகலாம். ஏனெனில் ஒரு ஏற்றுமதிக் கிராமத்தில் 10 ஆயிரம் மா மரம் நடப்பட்டது எனக் கொண்டால் மொத்தம் எத்தனை மரங்களாகும் என கணித்துப் பாருங்கள்.


சுதந்திரம் கிடைத்த காலப்பகுதியில் சிங்கப்புரின் தலாவீத வருமானமும் எமது தலாவீத வருமானமும் சமமாக இருந்தன. ஜப்பான் எம்மை விட ஒரு டொரால் கூடிக்காணப்பட்டது. இன்று சிங்கப்புரில் ஒருவருக்கான தலா வீத வருமானம் 5500 ஆகும்.  நாம் எமது தலா வீத வருமானத்தை 400 டொராக உயர்த்த பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்.  எனவே ஏற்றுமதி விவசாயத்தை அபிவருத்தி செய்து ஒருவருக்கான தலாவீத வருமானத்தை உயர்த்த வேண்டும். ஜனாதிபதி பிரதமர் போன்றவர்கள் நாட்டடை அபிவிருத்தி செய்யப் பாடு பட்டு வருகின்றனர். சில வேளைகளில் ஒரு சிலரது செயற்பாடுகள் காரணமாக சிரமத்திற்கு மத்தியில் பணியாற்ற வேண்டியும் உள்ளது.


தற்போதைய புரிந்துணர்வு அரசை கவிழ்பபோம் என்பது வெறும் மாயை. அது கவிழப் போவதில்லை. அது 2020 வரையும் ஆட்சி செய்து அதன் பின் நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று 2025 வரையும் தொடரும். அடுத்த போயாத்தினத்தில்; ஆட்சியை கவிழ்ப்போம், அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் தோல்வியடையச் செய்வோம் எனறெல்லாம் கூறுவது எதிர்கட்சிகள் வழiயாகக் கூறும் கதைகள்தான். நாமும் எதிர்கட்சியில் இருக்கும் போது அப்படித்தான் கூறினோம்.


ஏற்கனவே எமக்கு டொலர்களாகவே கடன் கிடைத்தது. அதனை டொலர்களாகவே மீளச் செவுத்த வேண்டும். தற்போது கடனுக்காக பெரும் தொகை டொலர்கள் தேவைப் படுகிறது. எனவே டொலருக்கான கேள்வி அதிகரித்து அதன் விலை கூடுகிறது. எனவே ரூபாயின் பெறுமதி கீழிறங்கி வருகிறது. ஏற்றுமதியை அதிகரித்தே அதனைச் சமப்படுத்த வேண்டும்.
இம்முறை கொண்டு வர உள்ள வரவு செலவுத்திட்டம் அபிவிருத்திக்கான ஒரு அடிப்படையை முன்வைப்பதாக இருக்கும். எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் முன்னர் 38 சதவீதமாக இருந்தது. மகிந்த ஆட்சியில் அது 12 சதவீதமானது. இன்று நாம் 15 சதவீதமாக உயர்த்தி உள்ளோம்.  அதனை 50 வீதமாக உயர்த்தும் வரை நாம் அயராது பாடுபடுவோம் என்றார்.  

பெற்ற கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட வேண்டி இருந்ததால் தான் சென்ற ஆட்சியாளர் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார். ஆனால் நாம் படிப்படியாக கட்டி வருகிறோம். பெற்ற கடனுக்கு வட்டியும் தவணையும் கட்ட வேண்டி இருந்ததால் தான் சென்ற ஆட்சியாளர்  ஓடிச் சென்று ஒளிந்து கொண்டார். ஆனால் நாம் படிப்படியாக கட்டி வருகிறோம். Reviewed by Madawala News on October 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.