யாஸிர் நிஸாருத்தீன் தயாரித்த “வெஸ்முஹுன” (முகமூடி)என்ற குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடம் ..



அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள்
அமைச்சு தேசிய மட்டத்தில் நடாத்திய 2018 ஆண்டிற்கான குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் இடம்பெற்றது.

தேசிய ரீதியில் மும்மொழிகளிலும் 37 குறுந்திரைப்படங்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு மொழியிலும் தொிவான மூன்று குறுந்திரைப் படங்களுக்கு பணப்பரிசில்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

இதில் யாஸிர் நிஸாருத்தீன் தயாரித்த “வெஸ்முஹுன” (முகமூடி)என்ற குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடத்திற்கு தெரிவானது. போட்டியில் முதலிடம் பெற்ற யாஸிருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசும் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட சபாநாயகர் கருஜயசூரிய, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பிரதியமைச்சா் அலீ சாஹிா் மௌலானா ஆகியோர் வெற்றிபெற்றவா்களுக்கான பரிசில்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தனா்.


வெற்றிபெற்ற மும்மொழிகளிலுமான ஏழு குறுந்திரைப்படங்கள் திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் திரையிடப்பட்டன.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு இன நல்லிணக்கத்தை கருப்பொருளாக வைத்து கடந்த 2017 வருடம் இந்த குறுந்திரைப்பட போட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்தது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வு, இந்த வருடத்திற்கான அமைச்சின் இரண்டாவது குறுந்திரைப்பட போட்டி நிகழ்வு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
யாஸிர் நிஸாருத்தீன் தயாரித்த “வெஸ்முஹுன” (முகமூடி)என்ற குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடம் .. யாஸிர் நிஸாருத்தீன் தயாரித்த “வெஸ்முஹுன” (முகமூடி)என்ற குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடம் .. Reviewed by Madawala News on October 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.