சதியொன்று நடக்கிறதா ? கல்முனை மக்களே அவதானம் ..இன்று வீரகேரி பத்திரிகையின் 11ம் பக்கத்தில் வெளிவந்த இந்தச் செய்தியின் தலைங்கம் எதனைச் சுட்டிக்காட்டுகின்றது என்பது புரிகின்றதா?

கல்முனை தமிழ் உப செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் கோவிலானது சட்டவிரோதமானது என்று கல்முனையின் மாநகர மேயர் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருக்கும் நிலையில் நேற்று 200பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆலய மறைப்பை பிரித்தெறிந்து அட்டகாசம் செய்தார்கள் என்று மொட்டையாக தலையங்கம் தீட்டி செய்தி வெளியிட்டதன் நோக்கத்துக்கு பின்னால் ஒரு சதியே இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்றய நாட்டின் சூழலில் இந்துக்கோவிலுக்கு அநியாயம் செய்தார்கள் என்று கூறும்போது, கல்முனையில் இருக்கும் முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளார்கள் என்றே என்னவேண்டியுள்ளது.

உண்மையில் இந்தக்காரியத்தை செய்தவர்கள் தமிழ் தரப்பினராக இருக்கும் போது, அதனைக் காரைதீவு நிருபரோ, அல்லது வீரகேசரி பத்திரிகையோ தெளிவாகக் குறிப்பிட்டுச் இச் செய்தியை போட்டிருக்க வேண்டும். இதுதான் ஒரு ஊடகவியலாளனின் நடுநிலைத்தண்மையை நிரூபிக்கும் விடயமாகும். 

அதனை விட்டுவிட்டு இந்துக்கோவிலின் மறைப்பை பிரித்தெரிந்து அட்டகாசம் என்று தலையங்கத்தைப் இட்டு பரபரப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு இனத்தை காட்டிக்கொடுத்து, அதன் மூலம் ஏதோவொன்றை சாதிக்க முற்படும் விடயமானது மிகவும் பாரதூரமான ஈனச் செயல் என்றே கூறவேண்டியுள்ளது எனலாம். 

இந்த விடயத்தை தமிழ் தரப்பினர்கள்தான் செய்தார்கள் என்று அந்தக் கட்டுரையில் எந்தப் பகுதியிலும் நிருபர் குறிப்பிடவில்லை, அந்த நிரூபர் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அவருக்கு இதன் உண்மைத்தண்மை நன்றாகவே தெரிந்திருந்தும், இப்படியான வதந்திகளை பரப்புவது ஏற்புடையதல்ல என்பதோடு, அந்த நிருபர் இதற்கான மாற்று அறிக்கையை விடவேண்டும் என்பதுதான் நியாயமானதாகும்.

இதனை குறிப்பிட்ட தரப்பினர்கள் கவணத்தில் எடுத்து தக்க மறுப்பரிக்கையை விடவேண்டும். அல்லாது போனால் சதிகாரர்களின் திட்டமே இங்கே பழிக்கும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சதியொன்று நடக்கிறதா ? கல்முனை மக்களே அவதானம் .. சதியொன்று நடக்கிறதா ?  கல்முனை மக்களே அவதானம் .. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.