எனது கணவனின் மரணம் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை... போதைக்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியின் கதறல்.


கடந்த மாதம் 19ஆம் திகதி இரத்தினபுரி பாம்காடன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சில காடையர்களால் கடத்திச்
செல்லப்பட்டு,பாரிய சித்திரவதைகளுக்குப் பின்னர்  இரும்புக் கம்பிகளால் அடித்துக் கொலைசெய்யப்பட்ட எனது கணவன் தனபால விஜேரத்னத்தின் மரணம் தொடர்பில் இதுவரை எனக்கு எந்த நீதியும் கிடைக்கப் பெறவில்லையென அவரின் மனைவி றஸிகா ஜீவன்தி ஊடகங்களிடம் இன்று(16) தெரிவித்தார்.


இரத்தினபுரி பாம்காடன் தோட்டத்தைச் சேர்ந்த தனபால விஜேரத்னத்தின் படுகொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் இன்னும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களின் மனநிலைகள் தொடர்பாக  அறிந்து கொள்ளும் நோக்குடன் இரத்தினபுரி ஊடகவியலாளர்கள் சிலர் அங்கு சென்றிருந்த போதே விஜேரத்னத்தின் மனைவி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனைவி றஸிகா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

"இரத்தினபுரி  பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் சந்தேகப்படுகின்றோம். அடிக்கடி பல பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறி இங்குள்ள  அப்பாவி தமிழ்  மக்கள் பலர்  தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இத்தோட்டத்தில் உள்ள தமிழ்   இளைஞ்சர்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது.

இன்னும் இரத்தினபுரி பொலிஸார் எனது கணவனை படுகொலை செய்த குற்றவாளிகளைத்தான் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.நான் இன்று எனது கணவனையும் இழந்திருக்கின்றேன்.எனக்குரிய பாதுகாப்பையும் இழந்து வருகின்றேன்", எனவும் அவர் குறிப்பிட்டார் .

கடந்த பல வருடங்களாக இரத்தினபுரி பாம்காடன் தோட்டப் பகுதியில் இடம்பெற்று வந்த போதைப் பொருள் பாவனைக்கு எதிராகப் போராடி  வீரமரணம் அடைந்த 36வயதுடைய தனபால விஜேரத்னத்தின்  படுகொலையை முன்னிட்டு முக்கிய  தமிழ்   அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற  உறுப்பினர்கள்  பலர் இரத்தினபுரிக்கு விஜயம் செய்து விஜேறத்னத்தின் மறைவிற்கு அனுதாபங்களை தெரிவித்திருந்ததுடன் இப்பகுதி தமிழ்  மக்களின்  பாதுகாப்பு குறித்தும் இரத்தினபுரி பொலிஸாருடன் பேச்சுவார்தைகளையும் நடத்தியிருந்தனர்.

அதேபோன்று  இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள   உள்ளுர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் பலரும்  இப்பகுதி மக்களின்  ஒத்துழைப்புடன் படுகொலை தொடர்பான  பாரிய எதிர்ப்புப் பேரணியொன்றையும் இரத்தினபுரி நகரில் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறான அனைத்து முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுள்ள பின்னரும் தனது கணவனின் படுகொலை தொடர்பில் உரிய நீதி கிடைக்கத் தவறியிருப்பது எமக்கு மிகுந்த  வருத்தத்தையும், பாரிய ஏமாற்றத்தையும்  தருகிறது எனவும் விஜேரத்னத்தின் மனைவி வேதனையுடன் குறிப்பிட்டார்.

எம்.எல்.எஸ்.முஹம்மத் - இரத்தினபுரி 
Mls Muhammedh

எனது கணவனின் மரணம் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை... போதைக்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியின் கதறல். எனது கணவனின் மரணம் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை... போதைக்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியின் கதறல். Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.