சுமார் 80 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சிக்கியவர்கள்.


பாலாவியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர்
நேற்று (21) பொலிஸாரால் கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமானளவில் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த சந்தேகநபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 35 வயதுடையவர்களென மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த கேரளா கஞ்சாவின் பெறுமதி, 8 மில்லியன் ரூபாயெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சிக்கியவர்கள். சுமார் 80 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சிக்கியவர்கள். Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.