யூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி .யூரோ மில்லியன் 488 பெருமதியான முதலீடு ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால்
2 வருடங்களாக  இழுபறியில் உள்ளதாக சிலோன் ஹைவே ஸ்பீட்  ரெயில்வே லிமிடட் குற்றம் சுமத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற  ஊடக மாநாட்டில் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இதனை குறிப்பிட்டார்.

அதிவேக ரயில்களை இலங்கையில் உற்பத்தி செய்தி ஏற்றுமதி செய்யும் குறித்த திட்டத்தை இலங்கை முதலீட்டு திணைக்களத்தில் தங்கள் நிறுவனம் சமர்ப்பித்ததாகவும் அதனை தொடர்ந்து தங்களுடைய இத்தாலி நாட்டு முதலீட்டார்களை ரஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளதாகவும் அவர்களிடம் தன்னுடைய முகவர் என ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் தன்னை தொடர்பு கொள்ள அவரை அனுகுமாறு கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகளை அனுகியுள்ள ராஜாங்க அமைச்சர் 10 % கமிஷன் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி . யூரோ மில்லியன் 450 பெருமதியான முதலீடு... ராஜாங்க அமைச்சர் கமிஷன் கோரியதால் 2 வருடங்கள் இழுபறி . Reviewed by Madawala News on October 14, 2018 Rating: 5