நாமல் குமார பொலிஸ் இன்போர்மராம்



நாமல் குமார என்ற நபர் பொலிஸ் இன்போர்மர் எனவும்( பொலிஸாருக்கு தகவல் வழங்கும் நபர் ) ரோஹிங்யா அகதிகள் தொடர்பாக அவர் வழங்கிய தகவல்களுக்கு 5 லட்சம் பொலிஸாரால் வழங்கப்பட்டதாகவும், திகன கலவரம் தொடர்பில் அவர் வழங்கிய தகவல்களுக்கு இது வரை கொடுப்பனவு வழங்க பொலிஸாரால் முடியவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


நேற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதை குறிப்பிட்டார்.


பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் ஊடகங்களுக்கு, கடந்த 12ஆம் திகதி, கருத்து வெளியிட்டிருந்த ஊழல் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார 


பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்தியிருந்தார்.


இது தொடர்பில், ஊழல் ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கெனவே விசாரணைகளை மேற்கொண்டது.


துல்ஹிரி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தன்னிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.


பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பிரதமர், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.


அத்துடன், குறித்த தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு அடங்கிய தொலைபேசியை  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாமல் குமார பொலிஸ் இன்போர்மராம் நாமல் குமார பொலிஸ் இன்போர்மராம் Reviewed by Madawala News on September 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.