பாடசாலை மாணவர்களுக்கு கேக் விற்பனை நிலையத்தில் இருந்து போதைப்பொருள்.


யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20)
திங்கட்கிழமை யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது.

அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ்  பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை முற்றுகையிடப்பட்டது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, விற்பனைக்குத் தயாராகவிருந்த சுமார் ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன.

அதனை விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கேக் விற்பனை நிலையத்திலிருந்த 45 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஐந்து சந்தி கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியும் கடந்த 7 ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. அதன்போது, பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பட்டப்பட்டதுடன், அதனைத் தயாரிக்கும் மூலப்பொருள்களும் மீட்கப்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களுக்கு கேக் விற்பனை நிலையத்தில் இருந்து போதைப்பொருள். பாடசாலை மாணவர்களுக்கு  கேக் விற்பனை நிலையத்தில் இருந்து போதைப்பொருள். Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.