அக்கரைப்பற்று VOG Dr. ரஜீவ் விதானகே மறைமுக நிகழ்ச்சி நிரலுடையவரா? செய்தியின் மறுபக்கம் என்ன?



நேற்று எமது இணையத்தளத்தில் வெளியான VOG Dr.ரஜீவ் விதானகே பற்றிய செய்தியின்
மறுபக்கத்தை பற்றி சற்று விரிவாக பல வைத்திய நிபுணர்களுடன் நாம் தெளிவாக ஆராய்ந்த போது,

குறிப்பிடப்பட்ட செய்தியில் தவறுகள் நடைபெற்றுள்ளமையை வைத்திய கண்ணோட்டத்தில் காணக்கூடியதாக உள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகிள்றனர்.

55 நாட்கள் கடந்த நிலையில் ரஜீவ் விதானகேயினால் வழங்கப்பட்ட பிரிஸ்கிரிப்சன் படி கருப்பை Bicornuate uterus என சந்தேகிப்பதாகவும், அதன் ஒரு பகுதியில் உயிருள்ள சிசு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கரு அமைந்துள்ள இடம் அதன் வளர்ச்சிக்கு உகந்ததா என்ற சந்தேகத்துடன் மேலதிக கண்காணிப்பிற்காகவும், மேலதிக பரிதசோதனைக்காகவும் (laparoscopy) அனுமதிக்கும்படி வேண்டியுள்ளார். கருவின் வளர்ச்சிக்கு  இடம் உகந்ததல்லாத பட்சத்தில் இந்த இடத்தில் வீக்கமடைந்து வெடிப்பதால், குருதி இழப்பு ஏற்பட்டு தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியே குறித்த தாயினை வைத்தியசாலையில் அனுமதிக்க பணித்துள்ளார்.இது சாதாரணமாக தாயையும், கருவையும் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கையே என்பதை அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

VOG ரஜீவ் விதானகேயிடம் சிகிச்சைக்காக சென்று,  பின்னர் மூன்று நாட்கள் கழித்தே VOG ரசீன் முகம்மட் இடம் அடுத்த சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

இந்த கால இடைவெளியில் கருவில் எந்த மாற்றமும் நிகழும் என்பது வைத்திய துறையில் உள்ளவர்கள் அறிந்த விடயமென்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் கால இடைவெளியே மாற்றத்தை அவதானிக்க கூடிய கால அவகாசமாகும்.

ரஜீவ் விதானகே கூறியது போன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் மேற்கூறிய முடிவே ரஜீவ் விதானகே அவர்களாலும் அவதானிக்கப்பட்டு நோயாளிக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.

தம்பதிகளின் தவறுதலான புரிதல்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம், அர்ப்பணிப்போடு வேலை செய்யும் Dr. ரஜீவ் விதானகே அவர்களின் பக்க நியாயத்தை அறிந்து கொள்ளாது செய்தியை வெளியிட்டமைக்கு மனவருத்தம் அடைகின்றோம்.

VOG Dr. ரஜீவ் விதானகே ஒரு அர்ப்பணிப்புள்ள வைத்திய நிபுணர் என்பது பலதடவைகள் நோயாளிகளாலேயே உணரப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட நேரத்திற்கும் தாமதமாகி சமூகம் கொடுத்த தனது நோயாளி ஒருவரை, விடுமுறைக்காக சென்ற கொண்டிருந்த வைத்தியர் பாதி வழியில் திரும்பி வந்து நோயாளியை பார்வையிட்டு பிரசவத்திற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அடுத்த நாள் தனது விடுமுறையை கழிக்க சென்ற சம்பவம் போன்ற பல சம்பவங்களை அவரது தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக கூற முடியும் என அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் சாட்சியம் கூறுகின்றனர். மேலும் அவர் எந்த ஒரு நோயாளியையும் இனவாத கண்கொண்டு நோக்காதவர் என அவரையறிந்த வைத்தியர்கள் உறுதிபட கருத்து தெரிவித்தனர்.

மேலும் பிரதேசத்தில் காணப்படும் ஏனைய வைத்தியசாலைகளோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் 30 வீதமான ஆகக்குறைந்தளவு  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவது VOG ரஜீவ் விதானகே உள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அட்டாளைசேனை அஸ்லம் அவர்களால் எழுதப்பட்டு எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியால் ஏற்பட்ட மனவருத்தத்திற்கு மன்னிப்பு தெரிவிப்பதோடு, VOG Dr. ரஜீவ் விதானகேயின் சேவை அக்கரைப்பற்றிற்கும் அதனை அண்டிய பிரதேசத்திற்கும் தொடர பிரார்த்திக்கிறோம்.

-அட்டாளைச்சேனை அஸ்லம்-

குறிப்பு : அட்டாளைசேனை அஸ்லம் அவர்களால் எழுதப்பட்ட குறித்த கட்டுரை எமது இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த கட்டுரையில் உள்ளட்டக்கப்பட்டிருந்த சகல கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் எமது நிர்வாகம் பொறுப்பாகாது .


அக்கரைப்பற்று VOG Dr. ரஜீவ் விதானகே மறைமுக நிகழ்ச்சி நிரலுடையவரா? செய்தியின் மறுபக்கம் என்ன? அக்கரைப்பற்று VOG Dr. ரஜீவ் விதானகே மறைமுக நிகழ்ச்சி நிரலுடையவரா? செய்தியின் மறுபக்கம் என்ன? Reviewed by Madawala News on August 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.