பிரபாகரனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பினேன். ஆனால் பிரபாகரன் எனது பேச்சை கேட்கவில்லை..


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தேன்
என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.

சமாதானமான முறையில் தீர்வை காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக பிரபாகரனை கொலை செய்தோம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐலன்ட் பத்திரிகையின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்.

2006 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பினேன்.

சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடியும். உங்கள் படைகள் எங்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்களை கொலை செய்வோம் என எச்சரித்தேன்.

எனினும் பிரபாகரன் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை. மாறாக இராணுவத்தினர் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினார் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
பிரபாகரனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பினேன். ஆனால் பிரபாகரன் எனது பேச்சை கேட்கவில்லை.. பிரபாகரனுக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பினேன்.  ஆனால்  பிரபாகரன் எனது பேச்சை கேட்கவில்லை.. Reviewed by Madawala News on August 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.