பசு மாடு ஒன்றை சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக கொண்டு சென்ற இருவர் கைது.


-அஸ்பர் ஏ ஹலீம் -
கிண்ணியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தை பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு
சட்டவிரோதமாக அறுவைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கால்நடையுடன் இருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச் சென்றதால் மிருக வதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பகுதிகளை சேர்ந்த அண்ணல் நகர்,புதுக் குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த 28,18 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைப்பற்றப்பட்ட கால் நடை மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட இருவரையும் கிண்ணியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பசு மாடு ஒன்றை சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக கொண்டு சென்ற இருவர் கைது. பசு மாடு ஒன்றை சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக கொண்டு சென்ற இருவர் கைது. Reviewed by Madawala News on August 11, 2018 Rating: 5