(படங்கள்) கிண்ணியாவில் ஹஜ் பெருநாளை கலகலப்பாக்கிய விளையாட்டுக்கள்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா நகர சபை கிராமக் கோடு சுற்று வட்டார இளைஞர்களது ஏற்பாட்டில் வியாழக்கிழமை
 மாலை கிண்ணியா நகர சபை மைதானத்தில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மிக விமர்சியாக ஹஜ் விளையாட்டு விழா இடம் பெற்றது.


தலையனைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், பலூன் உடைத்தல், கையிறு இழுத்தல், சீனடி, வினோத உடை உள்ளிட்ட கிண்ணியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களும் இப் போட்டி நிகழ்வில் இடம் பெற்றது.

போட்டியில் பங்கேற்று வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில் சிறுவர் பெறியார்களுக்கான பல சுவாரசியமான விளையாட்டு நிகழ்ச்சிகளோடு இரவு 7 மணியுடன் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  பாரளுமன்ற உருப்பினர் எம்.எஸ். தெளபீக் , முன்னால் கிண்ணியா நகர சபை தவிசாளரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான டாக்டர் ஹில்மி மஹரூப், கிண்ணியா பிரேதச சபை உருப்பினர்  அஸ்மி, சமூக ஆர்வலர் ரோகினா மஃருப் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

(படங்கள்) கிண்ணியாவில் ஹஜ் பெருநாளை கலகலப்பாக்கிய விளையாட்டுக்கள். (படங்கள்)  கிண்ணியாவில்  ஹஜ்  பெருநாளை கலகலப்பாக்கிய  விளையாட்டுக்கள். Reviewed by Madawala News on August 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.