மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருப்பதே பிரச்சினைகளுக்கு காரணம்.


-ஏ.ஆர்.ஏ.பரீல்-
அரசியலில் அதி உச்ச பதவி நிலையினை எட்டிப்பிடித்த
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தன்னால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முடியாது என்பதனை அறிந்திருந்தும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டுவரு வதே நாட்டின் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,  நீர்ப்பாசனம், நீர் வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவரு மான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர் துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவிய லாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் பதிலளிக்கையில் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி என்ற கெளரவத்தைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை இப்போது நாட்டில் இடம் பெற்றுள்ள அழிவுகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டியவராக உள்ளார்.


எதிர்க்கட்சியில் இருக்கும் குழுவினர் அதிகாரத்தை எப்படியாவது தாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனே செயற்ப டுகின்றனர்.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்து இரு பிரதான தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்தது அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கல்ல.

அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இலக்காகும், கொள்கையாகும்.
ஆனால் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னால் மீண்டும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதனை அறிந் திருந்தும் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுகின்ற மையே இந்நாட்டின் தற் போதைய அரசியல் பிரச்சி னைகளுக்குக் காரணமாய் அமைந்துள்ளன. .


 யுத்தத்தை வெற்றிகொண்ட தற்காக அவர் கெளரவமொன் றினைப் பெற்றுக்கொண்டது உண்மை . ஆனால் அந்த கெளரவங்கள் அனைத் தையும் அவர் தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியாது.

யுத்த வெற்றியை காரணம் காட்டி தொடர்ந்தும் அவர் அரசி யலில் இருப்பதால் அனைத்து அழிவுகளுக்கும் அவர் பதில் கூறியாக வேண்டும். அரசி யலில் ஜனாதிபதி பதவி வரை உச்ச நிலைக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பல்வேறு ஆசைகளுடன் இருப்பதே பிரச்சினைகளுக்குக் காரணம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது மற்றும் தனது குடும்பத்தின் நலனை எதிர்பார்த்து அரசியல்  செய்யாது நாட்டு நலனை கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.

மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருப்பதே பிரச்சினைகளுக்கு காரணம். மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருப்பதே பிரச்சினைகளுக்கு காரணம். Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.