புதிய தேர்தல் முறை­மையில் சிறு­பான்மை இனங்கள் அடி­மைப்­படும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வதை அனு­ம­திக்­க­மு­டி­யாது



ஏ.எல்.எம்.சத்தார்-
இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்­வா­கவும் சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மா­க­வுமே
அன்று மாகாண சபை முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், இன்று மாகா­ண­ச­பைக்­கான தேர்தல் முறையில் கொண்­டு­வ­ரப்­படும் மாற்­றங்­களால் சிறு­பான்மைப் பிர­தி­நி­தித்­துவம் குறை­யு­மாயின் மாகா­ண­சபை   உரு­வாக்­கப்­பட்ட நோக்­கமே பிழைத்­து­விடும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் மாகா­ண­சபைத் தேர்தல் குறித்த வாதம் இடம் பெற்ற போது அதில் தனக்­கு­ரிய நேரத்தில் உரை­யாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அதன்­போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

"மாகாண சபைக்­கான புதிய தேர்தல் முறை குறித்து கடந்த காலங்­களில் இம்­மன்றில் பலரும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

அண்­மையில் நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முடிவின் படி தொகு­தி­வாரி, விகி­தா­சாரம் கலந்த தேர்தல் முறை­மை­யி­லுள்ள குள­று­ப­டி­களை கண்டு கொண்டோம். அதனால் தான் மாகா­ண­சபைத் தேர்­தலில் அத்­த­கைய அவ­லங்கள் ஏற்­ப­டு­வதை தவிர்ப்­ப­தற்­காக புதிய தேர்தல் முறை­யொன்றின் தேவைப்­பாடு எல்­லோ­ராலும் உண­ரப்­பட்­டி­ருக்­கி­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்­றைக்­கொண்டு வரு­வ­தற்­கா­க­வேதான் மாகா­ண­சபை முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது. அன்று மாகா­ண­சபை தேவை­யில்லை என்று எதிர்த்து நின்­ற­வர்­கள்­கூட இன்று மாகா­ண­ச­பை­களில் பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்று அதன் பலன்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

மாகா­ண­சபை தேர்தல் முறையில் சிறு­பான்மை இனங்­க­ளுக்குப் பாதிப்­பில்­லாத முறையில் மாற்­றங்கள் செய்ய வேண்­டு­மென்று அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம்,  ரிஷாத் பதி­யுத்தீன், மனோ­க­ணேஷன் ஆகியோர்  உடன்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­கி­றார்கள்.

எல்லை நிர்­ணயக் கமிஷன் முன்­வைத்­துள்ள சில ஆலோ­ச­னைகள் குறித்து ஒரு முடி­வுக்கு வர­வேண்டும் என்றும் தேர்தல் முறையில் புதிய மாற்றம் ஒன்று  மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற உடன்­பாட்­டுக்கு இன்று நாம் முன்­வந்­தி­ருக்­கிறோம்.

எல்லை நிர்­ணயக் கமிஷன் சபை முன்­வைத்­துள்ள பிர­தி­நி­தித்­துவ அதி­க­ரிப்பில் பல சிக்­கல்கள் உள்­ளன.

1988 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபை சட்­ட­மூ­லத்தில் 1981 ஆம் ஆண்டு முதல் இருந்த அடிப்­ப­டை­யி­லேயே உறுப்­பினர் தொகை நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

2001 இல் இம்­மு­றையில் மீண்டும் திருத்­தங்கள் செய்­யப்­பட்­டது. அன்­றி­ருந்த தேர்­தல்கள் ஆணை­யாளர் தயா­னந்த திஸா­நா­யக்க வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் உறுப்­பினர் அதி­க­ரிப்பு குறித்து வெளி­யிட்டார். அந்த அடிப்­ப­டை­யி­லேயே இன்று மேல் மாகாண சபையில் 104 உறுப்­பி­னர்கள் இடம் பெற்­றுள்­ளார்கள்.

கமிஷன் சபை எழுத்­து­மூலம் சமர்ப்­பித்­துள்ள புதிய முறையில் மாகா­ண­சபை முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவ எண்­ணிக்கை குறித்த கணிப்­பீடு தவ­றா­ன­தாகும். இப்­போது மாகா­ண­ச­பையில் 43 முஸ்லிம் உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். ஆனால், புதி­தாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தொகு­தி­வா­ரி­யான 50 வீதம்  தெரிவில்13 முஸ்லிம் பிர­தி­நி­தி­களே தெரி­வா­கி­றார்கள்.  

விகி­தா­சார 50 வீதத்தில் மேலும் 13 முஸ்லிம்  உறுப்­பி­னர்கள் சேர்க்­கப்­படும் நிலையில் மொத்தம் 26 முஸ்லிம் பிர­தி­நி­தி­களே அங்கம் வகிக்கும் நிலை உள்­ளது. ஆனால், எல்லை நிர்­ணயக் கமிஷன் சபையோ தற்­போ­துள்ள முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தில் வெறும் மூன்­று­பேரே குறையும் என்று தெரி­வித்­துள்­ளது. இது தவறு. இருக்கும் 43 பேரில் 26 பேர் தெரி­வாகும் பட்­சத்தில்17 பேர் குறை­யப்­போ­கி­றார்கள் என்­பதே நடக்­கப்­போ­கி­றது.

அடுத்து பல அங்­கத்­தவர் தொகுதி விட­யத்­திலும் எல்லை நிர்­ணயக் கமிஷன் சபை தவ­றான சிந்­த­னை­யொன்­றையே முன்­வைத்­துள்­ளமை தெளிவு. 116000 பேருக்கு ஒரு தொகுதி என்ற அடிப்­ப­டை­யி­லேயே எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த இடத்­திலே இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யென்றால் 230000 பேர் இருக்க வேண்டும் என்ற வேடிக்­கை­யான கணிப்­பீட்டை முன்­வைத்­துள்­ளது.

இரட்டை அங்­கத்­தவர் தொகு­தி­யென்றால் அங்­குள்ள வாக்­காளர் எண்­ணிக்கை இரு மடங்­காக வேண்டும் என்­ப­தல்ல அதன் அர்த்தம். குறித்த தேர்தல் தொகு­தியில் வாழும் 10 வீதமோ அல்­லது 20 வீத­மா­கவோ வதியும் சிறு­பான்மை இனத்­துக்கும் ஒரு பிர­தி­நி­தித்­துவம் வழங்­க­வேண்டும் என்­ப­தற்கே இரட்டை, மூவர் தொகு­திகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன.

உதா­ர­ண­மாக 70 களில் கொழும்பு மத்­திய தேர்தல் தொகு­தியில் ஆர்.பிரே­ம­தாச, ஜாபிர் ஏ.காதர், ஹலீம் இஷாக் ஆகிய மூவர் வெற்றிபெற்று இரு முஸ்லிம் பிர­தி­நி­திகள் அங்கு தெரி­வு­செய்­யப்­பட்­டனர். அப்­போது அத்­தொ­கு­தியில் 160000 வாக்­குகள் தான் இருந்­தன. கமிஷன் சபை கூறு­வ­து­போன்று மூன்று மடங்­கல்ல.

அப்­போது பேரு­வளை இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியில் 54 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு சம­ர­நா­யக்க, எம்.ஏ.பாக்கீர் மாக்கார், இருவர் தெரி­வா­கி­யுள்­ளனர். கண்­டியில் 74 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு காமினி திஸா­நா­யக்க, அனுர பண்­டா­ர­நா­யக்க, சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் ஆகிய மூவர் தெரி­வா­கினர். மட்­டக்­க­ளப்பு இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியில் 40 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு அகமட் கரீம், ராஜ­துரை ஆகியோர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டனர். 

ஹாரிஸ்­பத்­துவ இரட்டை அங்­கத்­தவர் தொகு­தியில் ஏ.ஸீ.எஸ்.ஹமீத், சிரி­சே­னவும் பொத்­துவில் தொகு­தியில் ஜலால் தீன், கன­க­ரத்­தினம் ஆகிய இரு­வரும் தெரி­வா­கினர். மேற்­கண்ட முறை­மையில் அந்­தந்த தொகு­தி­களில் வாழும் சகல இனத்­த­வர்­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­கப்­பெற்ற மேலான ஜன­நா­யக முறைமை அன்று நில­வி­யது. இந்த சிறப்­பு­ரி­மையை இப்­போது எல்லை நிர்­ணய கமிஷன் சபை தட்­டிப்­ப­றித்­துள்­ளது. அத்­துடன் அவர்­களால் இரட்டை அங்­கத்­தவர் அல்­லது பல அங்­கத்­தவர் தொகுதி என்­பது கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எனவே பிர­தி­நி­தித்­துவ அதி­க­ரிப்பு என்­பது சிறு­பான்­மை­யி­னத்­துக்கும் போதிய பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­கத்­தக்­க­வாறு அதி­க­ரிப்பு முறைமை கையா­ளப்­பட வேண்டும். சிறு­பான்மைப் பிர­தி­நி­தித்­துவம் தற்­போது இருப்­பதை விடக் குறை­யு­மாயின் அது ஜன­நா­ய­கத்தை இல்­லா­ம­லாக்கும் செய­லாகும். இதனை யாரும் ஏற்­க­மாட்­டார்கள்.

பாரா­ளு­மன்றத் தேர்தல் விகி­தா­சார முறை­மைக்கு மாற்­றப்­பட்­ட­போது சிறு கட்­சி­க­ளுக்கு 12 வீத­மாக இருந்த வெட்­டுப்­புள்ளி முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தா­ச­வினால் 5 வீத­மாகக் குறைக்­கப்­பட்­டது. இதனால் சிறு­பான்மை இனக் கட்­சிகள் மட்­டு­மன்றி சிறு கட்­சி­களும் பாரா­ளு­மன்றம் சென்று தம் குரல்­களை ஒலிக்க வழி­கோ­லி­யது. தெற்­கிலே ஆட்­சி­யைப்­பி­டிக்க ஆயுதப் போராட்­டத்தில் குதித்த இளை­ஞர்­களும் இந்த வெட்­டுப்­புள்ளி குறைப்பால் ஜன­நா­யக ரீதியில் பிர­தி­நித்­துவம் பெற்று தம் எண்­ணக்­கி­டக்­கைகள், அபி­லா­ஷை­களை நிறை­வேற்றிக் கொண்ட சிறப்பை நாம் அன்று கண்டு கொண்டோம்.

விரக்­தி­ய­டைந்த வாலி­பர்கள் 5 வீத வெட்­டுப்­புள்ளி குறைப்பால் மீண்டும் மீண்டும் ஆயுதம் ஏந்தும் கலா­சா­ரத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டது.

எனவே புதிய தேர்தல் முறை­மையில் சிறு­பான்மை இனங்கள் அடி­மைப்­படும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வதை அனு­ம­திக்­க­மு­டி­யாது. இவ்­வாறு அடக்கி ஒடுக்­கப்­படும் பட்­சத்தில் அது பிறிதோர் இடத்தில் மற்­றொரு பூகம்­ப­மாக வெடிக்­கவே வழி­வ­குக்கும். இது முழு நாட்­டுக்கும் அழி­வையே உண்டு பண்ணும். இதன் கோர விளை­வு­களை நாம் நன்கு அனு­ப­வித்­துள்ளோம். எனவே சகல இனத்­த­வர்­களும் ஜன­நா­யக ரீதியில் ஆட்­சி­பீ­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை இதன்­மூலம் உணர்ந்­து­கொள்­ளலாம்.

உள்­ளூ­ராட்சி மாகாண சபை­களின் அமைச்­சரின் சில விட­யங்­களில் நாம் உடன்­ப­டு­கிறோம். மற்றும் சில விட­யங்­கள் எம்மால் ஏற்க முடி­யா­துள்­ளன.

இலங்­கையில் மூன்று இனக் குழு­மங்கள் வாழ்­கின்­றன. வெவ்­வேறு மொழிகள் பேசு­கின்­றன. வேறு கலா­சாரம், உணவு முறை­மையில் வித்­தி­யாசம், இப்­படி எது­வு­மில்­லாது அனை­வரும் ஒரே மொழி, ஒரே கலா­சாரம் என்­றி­ருந்தால் அமைச்சர் முன்­வைக்கும் விடயம் சரி. ஆனால், பல்­வேறு இன, மத, கலா­சார குழு­மங்கள் வாழும் ஒரு நாட்டில் சகல இனங்­க­ளி­னதும் பிர­தி­நி­தித்­துவம் ஆட்­சி­பீ­டத்தில் இருக்க வேண்­டி­யது ஜன­நா­யகப் பண்­பாகும். சகல இனங்­களும் முறை­யாக அனு­ச­ரிக்­கப்­ப­டா­மை­யாலே நாம் 30 வரு­டங்கள் யுத்­தப்­பி­டியில் சிக்­கித்­த­வித்தோம். 

அன்று இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட்­டி­ருந்தால் பிர­பா­கரன் ஆயுதம் ஏந்­தி­யி­ருக்­க­மாட்டார். புலிகள் தலை தூக்­கி­யி­ருக்­க­மாட்­டாது. எனவே சிறு­பான்­மை­யி­னங்கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­திலே உறுதியாக இருக்கிறோம்.ஆனால், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் போன்றோர்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் உடன்படுவதற்கில்லை.நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடே எனது குறிக்கோளாகும்.

மலையகத்தில் தமிழர்களுக்கும் வடக்கில் தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. தெற்கில் வாழும் முஸ்லிம்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  

எனவே சகல இன, மதத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறை அமையுமாயின் அனைவரதும் கருத்துகள் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனவே புதிய தேர்தல் முறைமையொன்று மிகவும் இன்றியமையாததாகும். அதில் கணிசமானளவு சிறுபான்மை இனங்களுக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய வண்ணம் மாற்றங்கள் மிகவும் அவசியமாகும் என்று கூறி விடை பெறுகிறேன்.
-Vidivelli
புதிய தேர்தல் முறை­மையில் சிறு­பான்மை இனங்கள் அடி­மைப்­படும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வதை அனு­ம­திக்­க­மு­டி­யாது புதிய தேர்தல் முறை­மையில் சிறு­பான்மை இனங்கள் அடி­மைப்­படும் நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வதை அனு­ம­திக்­க­மு­டி­யாது Reviewed by Madawala News on July 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.