இலங்கையில் சட்டரீதியாக பிறைபார்த்து தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடமிருக்கிறது?


கொழும்பு பெரிய பள்ளியின்பிறைத்தீர்மானம் இலங்கை முஸ்லீம்களை மூன்று பிரிவுகளாக்கி
பெருநாளை கொண்டாட வைத்ததை நாம்  காணக்கூடியதாக இருந்தது.

14 திகதி வெற்றுக்கண்ணால் பிறைபார்த்ததை ஆதாரமாகக் கொண்டவர்கள் மறுநாள்(15) பெருநாள் கொண்டாடினர்,வானிலை அவதான நிலையத்தின் சாத்தியக்கூறின் அடிப்படையில் "பிறை தென்படவில்லை பார்த்தவர்கள் பொய் கூறுகிறார்கள் "எனும் அடிப்படையில் பலர் 15 ல் நோன்பு பிடித்து 16ல் பெருநாள் கொண்டாடினர். எல்லாவற்றிலும் இரண்டாங்கெட்ட நிலை இருப்பது போன்று இதிலும் இரண்டாங்கெட்ட நிலையிலுள்ளவர்கள் 15ம் திகதி நோன்பு பிடிக்காது பெருநாளும் கொண்டாடாது 16 ல் பெருநாள் கொண்டாடினர்.

பிறைபார்த்தல் விடயத்தைத் தீர்மானிப்பவர்களாக  முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம்,அகில இலங்கை ஜம்யத்துல் உலமா மற்றும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பனவற்றை ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களால் ஏற்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டிருப்பனையும நாம் அறிவோம்.

மேற்கூறப்பட்ட அமைப்புகளுக்கு சட்டரீதியாக பிறை பார்க்கும் அதிகாரத்தை மக்களால் பாராளுமன்ற சட்டத்தினூடாக வழங்கப்பட்டிருக்கிறதா?  என்பதை தகுந்த சட்டங்களின் துணையுடன்  பொதுமக்களுக்கு விளங்கப்படுத்துவதனூடாக அல்லாஹ் என்மீது சுமத்தியுள்ள அமானிதத்தை இத்தால் நிறைவேற்றுகிறேன்.

இதோ அந்தச்சட்டங்கள்

1.    1956 ஆண்டின் 51 ம் இலக்க முஸ்லிம் பள்ளிவாசல்கள் தரும நம்பிக்கைப்பொறுப்பு அல்லது வக்புகள் கட்டளைச்சட்டம்.(Wakfs Act)
=============================முஸ்லிம் கலாச்சார திணைக்களம் மேற்கூறப்பட்டசட்டத்தின் படி பள்ளிவாயல்கள் மற்றும் புண்ணிய தலங்களை பதிவு செய்தல், அவற்றுக்கான  நம்பிக்கையாளர் சபைகளை தெரிவு செய்தல்,அதில் பிணக்குகள் வந்தால் அதனை வக்புசபையினூடாக தீர்த்தல் முடியாவிட்டால் வக்பு நியாயசபையினூடாக தீர்த்தல் மற்றும் அதற்கான பணியாட்
தொகுதியை வேலைக்கமர்த்தல்   என்பவற்றுடன் பள்ளிவாசல்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரித்தல் ,அவற்றின் உறுதி ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் கணக்கு வழக்குகளை ஆராய்தல் என்பன போன்ற காரியங்களை செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.


எனவே மேற்கூறப்பட்ட சட்டத்தின் படி பிறை சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு எந்த அதிகாரமும் இந்த விடயத்திற்குபொறுப்பான அமைச்சுக்கோ திணைக்களத்துக்கோ வழங்கப்படவில்லை.

2. 2000ம் ஆண்டின் 51ம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சட்டம்.
============================
மேற்கூறப்பட்ட சட்டத்தின் பிரிவு 3ன் படி

"தீனுல் இஸ்லாம்" எனும் இஸ்லாமிய சித்தாந்தத்தை ஊக்குவித்தலும் பாதுகாத்தலும்

முஸ்லிம் சமுகங்களிடையேயும் மார்க்க அறிஞர்களுக்கிடையில் ஐக்கியத்தை ஊக்குவித்தலும் வளர்த்தலும்

இஸ்லாத்திற்கிணங்க முஸ்லிம்களின் சமூக கலாச்சார பொருளாதார நலன்களை வளர்த்தல்.

ஜும்மா த்தொழுகை ஒழுங்கு படுத்தல்

முஸ்லீம்களுக்கும்முஸ்லிமல்லாதவரகளுக்கு இஸ்லாத்தை விளங்கப்படுத்த பத்திரிகைகள் சஞ்சிகைகள் புத்தகங்களை முன்மொழிகளிலும் வெளியிடுதல்.

அறபு மொழி கற்கையை ஊக்குவித்தல்.

சமூகங்களுக்கிடையே ஒத்துமையை ஏற்படுத்தல்.

மாவட்டங்கள் தோரும் கிளைகளை உருவாக்குதல்.

மேற்கூறப்பட்ட நோக்கத்தை அடைவதற்கான தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

எனவே இவர்களுக்கும் பிறை தொடர்பான முடிவெடுக்க முடியாது.

3.1986ம் ஆண்டின் 22ம் இலக்க கூட்டிணைக்கப்பட்ட கொழும்பு பெரிய பள்ளிவாயல் சட்டம்.
========================

மேற்கூறப்பட்ட சட்டத்தின் 3ம் பிரிவின் படி

வணக்க மற்றும் கலாச்சார நோக்குக்காக கட்டடங்களை நிர்மானித்தல்,
பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்.

பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிகளையும் புனித தளங்களையும் பழுது பார்த்தலும் பராமரித்தலும்.

கல்விவளர்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தல்.

பசிபோக்குதல்,நோயாளிகளுக்கு உதவுதல், உடையற்றவர்களுக்குஉடைவழங்குதல்,வீடற்றவர்களுக்கு வீடுகட்ட உதவுதல்.

ஷக்காத் சதகாக்களை வசூலிப்பதும் பங்கிடுவதும்.

மேற்கூறப்பட்டவைகளே கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் பிரதான நோக்கங்களாகும்.

எனவே இவர்களுக்கும் பிறை தீர்மானிக்கும் அதிகாரமில்லை.

அத்துடன் மேற்கூறப்பட்ட 2ம் மற்றும் 3ம் சட்டங்களின் 10ம் பிரிவின் படி மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் குடியரசின் , ஏனைய அமைப்புக்களின் அல்லது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

பிறையை தீர்மானிக்கும் விடயமானது ஒரு சட்டத்தினால் கட்டுப்படுத்தாமையையே கடந்த கால அமலிதுமலிகளுக்கு காரணமாகும்.

இதை தவிர்ப்பதற்கு நான் முன்வைக்கும் சிபார்சுகள்.
===================
தற்போது எமது முஸ்லிம்தனியார் சட்டத்திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இத்தருவாயில் திருத்தற்குழுவின் கவனதிற்கு பின்வரும் விடயங்களை கொண்டுவரவேண்டும்.

எவ்வொரு பிரதேசத்திலிருக்கும் ஹாதி(quazi)மார்களுக்கும் பிறை பார்க்கும் அதிகாரத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டைச்செய்து அவர்களின் பெரும்பான்மையானவர்களின் முடிவை வைத்து கொழும்பிலிருக்கும் ஹாதிகள் (Board of quazi )சபையானது பிறை தொடர்பான இறுதி முடிவை எடுக்க வழிவகை செய்வதுடன்,

இவர்களின் தீர்மானங்களில் தலையிடுபவர்களுக்கு சிறைத்தண்டணை அல்லது தண்டப்பண அறவீட்டை செய்வதனூடாக சுதந்திரமான பிறை தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.

எனக்குதெரிந்த சட்ட அறிவை உங்களுடன் பகிருகிறேன்.எனது கருத்திற்கு முரணாக வழக்குத்தீர்ப்புகள் அல்லது சுற்ற றிக்கைகள் ஏதாவது இருந்தால் எனது மேற்கூறப்பட்ட கருத்துக்களை மீழப்பெற தயாராகயிருக்கிறேன்.

சட்டத்தரணி சறூக்-கொழும்பு
இலங்கையில் சட்டரீதியாக பிறைபார்த்து தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடமிருக்கிறது? இலங்கையில் சட்டரீதியாக பிறைபார்த்து தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடமிருக்கிறது? Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.