சர்ச்சைக்குரிய தலைப்பு தொடர்பில் வீரகேசியின் விளக்கமும் மன்னிப்பும்.


வீரகேசரி பத்திரிகையில் கடந்த சனிக்கிழமை (16.06.2018) வெளியான தலைப்புச் செய்தி பற்றி சமூக
வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் ஒருவித எதிர்ப்பலை தோன்றியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

முதலில், இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற மனக்கிலேசத்தையும் உங்களது உணர்வு வெளிப்பாடுகளையும் நாம் மதிக்கின்றோம். ஒரு பொறுப்புள்ள தேசியப் பத்திரிகை என்ற அடிப்படையில் இதன் உண்மைத்தன்மை குறித்து முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய வாசகர்களுக்கும் தெளிவுபடுத்துவது எமது கடமையாகவுள்ளது.

அந்தக் குறிப்பிட்ட செய்தி வீரகேசரி பத்திரிகையினதோ அல்லது எமது நிறுவனத்தினதோ நிலைப்பாடு அல்ல என்பதையும், அந்தச் செய்தியை நாம் பொய்யாக புனைந்து வெ ளியிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்ற பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார கைதாகி சிறையிலடைக்கப்பட்டமை,கடத்தப்பட்ட ஊடகவியலாளர் எக்னலியகொடவின் மனைவியை ஏசிய வழக்கில் என்பதை நாம் அறியாதவர்களல்லர். அதுபற்றிய செய்தி ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டும் விட்டது.

இருப்பினும், முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவதை முன்னிட்டு உடனடியாக ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த பொது பலசேனா அமைப்பு,இந்தக் கைதை முஸ்லிம்களின் பெருநாளோடு தொடர்புபடுத்தி கருத்து வௌியிட்டிருந்தது. இவ்வழக்கை சிங்கள மக்கள் மத்தியில் திசைதிருப்புவதற்காகவே அவ்வமைப்பு இதனை தொிவித்திருந்தாலும் அது அவர்களுடைய நிலைப்பாடே அன்றி வீரகேசரியினுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. எனவே அவர்கள் சொன்ன விடயத்தை முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற உந்துதலிலே அந்த செய்தி அவ்விதம் எழுதப்பட்டிருந்தது. தவிர, வேறு எந்த தவறான நோக்கங்களும் இல்லை என்பதை அழுத்தி உரைக்க விரும்புகின்றோம்.

ஆனாலும்,ஒரு புனித பண்டிகை கொண்டாடப்படுகின்ற நாளில், பொதுபலசேனா சொல்லியிருந்தாலும் அவ்விடயத்தை தலைப்பில் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம் என்று முஸ்லிம் சகோதரர்கள் கூறுகின்ற ஆலோசனையை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். நாம் அந்த செய்தியை கொண்டு சோ்க்கும் முயற்சியில், இதன் மறு கோணம் முஸ்லிம்களின் மனதை பாதிக்கலாம் என்பதை பற்றி சிந்திக்க தவறிவிட்டோம். அந்த வகையில் இந்த தலைப்பால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உளரீதியான தாக்கத்திற்கு மிகுந்த வருத்தத்தை தொிவித்துக் கொள்கின்றோம்.

மேலும்,வீரகேசரியின் கிட்டத்தட்ட அரைவாசி அளவுக்கான வாசகர்களாகவும்,விளம்பரதாரர்களாகவும்,ஊடகவியலாளர்களாகவும்,அப்பத்திரிகையின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்தவர்களாகவும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு, இதுபோன்ற ஒரு அசௌகியம் இனிமேல் ஏற்படாத வகையில் தொடர்ந்தும் உங்களுடைய குரலாகவும் இருக்க இப்பத்திரிகை கடமைப்பட்டுள்ளது என்பதையும் தொிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு: ஆசிரியர் ( வீரகேசரி)
சர்ச்சைக்குரிய தலைப்பு தொடர்பில் வீரகேசியின் விளக்கமும் மன்னிப்பும். சர்ச்சைக்குரிய தலைப்பு தொடர்பில் வீரகேசியின் விளக்கமும் மன்னிப்பும். Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.