இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட சாரணர்கள் மூலம் ஒரு நிகழ்வு.


-ஜே.எம்.ஹபீஸ்-
இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட்டு சமாதானமாக வாழ்வதற்கு மதங்கள்  மற்றும்
கலாசாரங்கள் பற்றிய புரிந்துணர்வு அவசியம் என்ற அடிப்படையில் மாத்தளை மாவட்ட சாரணர் மற்றும் குருளைச் சாரணர்களுக்கான 'பல் கலாசாரப் புரிந்துணர்வு'  எனும் தொனிப்பொருளில் செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. (15.6.2018)


மாத்தளை இந்துக் கல்;லூரியில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம பேச்சாளராக அரச மொழி பெயர்ப்பாளர் அஷ்ஷேக் பி. தாரிக் அலி (நளிமி) கலந்து கொண்டு நோன்பின் மகிமை பற்றிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்.


சாரணர் அமைப்பின் மாவட்ட ஆணையாளர் சி. கே. அபேவர்தன, மாத்தளை வலய உதவி ஆணையாளர் மொஹமட் சிப்லி, பயிற்சிகளுக்குப் பொறுப்பான உதவி ஆணையாளர் ஆர். சசீதரன் மாத்தளை இந்துகல்லுரி அதிபர் கனேஷமூர்த்தி மற்றும்  'பேகர் ஹட்' நிறுவனப் பணிப்பானர் ஏ. ஹமீட் உற்படப் பலர் கலந்து கொண்டனர். அதன் போது எடுக்கப்பட்ட படங்கள் .
இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட சாரணர்கள் மூலம் ஒரு நிகழ்வு. இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்பட சாரணர்கள் மூலம் ஒரு நிகழ்வு. Reviewed by Madawala News on June 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.