ஞானசார தேரரின் கைதை வைத்து மஹிந்த அணியினர் இனவாத பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.


ஞானசார தேரரின் கைதை வைத்து மஹிந்த அணியினர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதபிரச்சாரம் மேற்கொண்டு
வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் வெள்ளிகிழமை காலை கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். .அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நல்லாட்சியில் நாம் நீதித்துறை ஊடகத்துறை அனைத்துக்கும் பூரண சுதந்திரம் வழங்கி உள்ளோம்.ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி பத்திரிகைகளை பாருங்கள் ஊடகங்கள் அனைத்தும் எம்மை எந்த அளவு விமர்சிக்கின்றன என்று. ஆனால் கடந்த ஆட்சிகாலத்தில் நீதித்துறையும் ஊடகத்துறையும் எவ்வாறு காணப்பட்டது என்பதை இன்று ஊடகங்களே மறந்துவிட்டன. எம்மை இவ்வாறு விமர்சிப்பது போன்று அன்று ராஜபக்சக்களை விமர்சித்திருந்தால் அவர்கள் வீட்டுக்கு உயிருடன் சென்றிருக்க முடியுமா அல்லது வெள்ளை வேன் கலாச்சாரத்தை மறந்துவிட்டார்களா?

அன்று தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்தார்கள் ராஜபக்ச சகோதரர்கள் ஆனால் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியம் கூறுகிறார். இதுவே எமது ஆட்சிக்கும் ராஜபக்ச ஆட்சிக்கும் இடையிலுள்ள வித்தியாசம்.

அன்று பிரதமர் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஆஜராகும் போது நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதாக கூறிய கூட்டு எதிர்கட்சியின் சில உறுப்பினர்களுக்கு ஞானசார தேரர் கைது செய்யப்பட்டதும் அது அரசுக்கு சார்பாக செயற்படுவதாக கூறுவது வேடிக்கையானது.

இன்று இவரின் கைதை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் அரசுக்கெதிராக பாரிய துவேச பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் ஞானசார தேரருக்கு ஆதரவாக தேரர்கள் அடங்கிய குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தை முன்னெடுத்த தேரர்களில் பலர் பொதுஜன பெரமுனவுடன் நெருங்கிய உறவில் உள்ளவர்கள்.

இந்த கைதை வைத்து ராஜபக்ச ஆதரவாளர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பாரிய வேலை திட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றனர்.இதனால் அரசில் உள்ள சில அமைச்சர்கள் கூட ஞானசார தேரருக்கு ஆதரவாக கருத்து வெளியிடும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். ஆனாலும் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மஹிந்தவின் அரசிலும் அமைச்சர்களாகவே இருந்தனர் அவர்கள் எந்த அரசில் இருந்தாலும் இவ்வாறான கருத்துக்களையே கூறுவர்.

இன்று எமது முஸ்லிம் சகோதர்கள் நாடு தற்போது உள்ள நிலையை யோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். ஞானசார தேரர் கைது செய்ததுக்கு இவர்களும் எமது அரசையே குற்றம் சாட்டுகின்றனர். ஏன் என கேட்டால் முஸ்லிம் விரோத செயலுக்கு அவரை இன்னும் கைது செய்யவில்லையாம். இவர்களுக்கு நான் மீண்டும் கூறுகிறேன் நாம் சுயாதீன நீதி துறையை ஏற்படுத்தியுள்ளோம். முஸ்லிம் விரோத செயல்களுக்கு எதிராக அவர் மேல் வழக்கு தாக்கல் செய்யப்படுள்ளது. குற்றம் நிரூபிக்க பட்டால் அவர் அதற்கும் கைது செய்யப்படுவார். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்திருந்தால் ஞானசார தேரரை உங்களால் நீதி மன்றத்துக்காவது அழைத்துவர முடியுமா?

ஆகவே நாம் ஏற்படுத்தி தந்த சுயாதீன நீதி ஊடகத்துறையை நல்லாட்சியை விமர்சிக்க மட்டும் பயன்படுத்தாமல் நாட்டுக்கு பயன் உள்ள முறையிலும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு
ஞானசார தேரரின் கைதை வைத்து மஹிந்த அணியினர் இனவாத பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். ஞானசார தேரரின் கைதை வைத்து மஹிந்த அணியினர் இனவாத பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். Reviewed by nafees on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.