தாருன் நுஸ்ரா சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சிறுமிகளை மீண்டும் படுகுழியில் தள்ள கூட்டுச் சதி! கோமாவில் சமூகம்!



உடைத்த சோடாப் புட்டில் போன்று பொசு பொசுவென்று பொங்கிவிட்டு அடங்கிப்போகும்
சோனகச் சமூகம் முற்றாக மறந்து போன ஒரு விடயம் தான்  அமானிதங்களான ஆதரவற்ற சிறுமிகளுக்கு தாருன் நுஸ்ரா சிறுவர் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் வழக்கை தாக்கல் செய்த உடனேயே வெளி உலகிற்கு இவ்விடயத்தை மூடி மறைக்க அலாதிப் பிரயத்தனங்களை பெட்ரோ டாலர் முஸ்லீம் NGOக்களும், முஸ்லிம் புத்திஜீவிகளும், சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் முன்னெடுத்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மீண்டும் தாருன் நுஸ்ராவிற்கே நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டனர். (இதற்கு தாருன் நுஸ்ரா நிர்வாகத்தினரின் சுயலாபங்களும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு – Probation Department - இன் பொறுப்பற்ற செயற்பாடுகளும்  காரணமாக இருந்தன) .

இரண்டு மாதங்களின் பின்னர் சமூக ஊடகங்களில் இது குறித்து பேசப்படவும், அதன் பயனாக தொடராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு; சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டு; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) யின் உதவியும் பெறப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறுமிகள் தாருன் நுஸ்ராவில் இருந்து மீட்கப்பட்டனர். 

தாருன் நுஸ்ராவில் இருந்து மீட்கப்பட்ட அநாதரவான சிறுமிகள் மூன்று வெவ்வேறு சிறுவர் காப்பகங்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுமிகளை பாடசாலைகளில் அனுமதிக்கும் பொறுப்பு Probation Department, NCPA ஆகியவற்றிடம் நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்டது. சிறுமிகள் மீட்கப்பட்ட சில வாரங்களில் NCPA யின் பணிப்பாளராக பணியாற்றிய மரினி டி லிவேரா நீக்கப்பட்டு வேறொருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட துர்ப்பாக்கிய சம்பவமும் இடம்பெற்றது. அத்துடன் இதுவரை காலமும் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் இடமாற்றம் பெற்றுச் செல்ல, வழக்கு வேறொரு நீதிபதியின் கீழ் தற்பொழுது வந்துள்ளது. 

ஆரம்பத்தில் சிறுமிகளின் நலன் சார்பாக ஆஜராகி இருந்த NCPA, அதன் நிர்வாக மாற்றத்தின் பின்னர் தற்பொழுது பொடுபோக்காக செயற்பட்டு வருவதுடன், ஏற்கனவே பொடுபோக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் Probation Department உடன் இணைந்து சிறுமிகளை மீண்டும் தாருன் நுஸ்ராவிற்குள் தள்ளிவிட கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

சிறுமிகளுக்கு பாடசாலைகள் எதனையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்காத Probation Department, NCPA ஆகிய இரண்டும், சிறுமிகளுக்கு உரிய பாடசாலைகள் இல்லை, ஆகவே அவர்களை மீண்டும் தாருன் நுஸ்ராவிற்கே அனுப்ப வேண்டும் என்று இம்மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர். சிறுமிகளுக்கு உரிய பாடசாலைகளை பெற்றுக்கொடுப்பதில் அசமந்தமாக செயற்பட்டு கடந்த மூன்று மாதங்களாக எதுவுமே செய்யாத Probation Department, NCPA ஆகியன யாரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சிறுமிகளின் கல்வியை சாட்டாக வைத்து சிறுமிகளை மீண்டும் தாருன் நுஸ்ராவினுள் தள்ள முயல்கின்றன? 

தாருன் நுஸ்ராவை நடாத்தி வந்த அல் முஸ்லிமாத் நிறுவனம் இலங்கை சோனக மேற்தட்டு வர்க்கத்தினதும், பெட்ரோ டாலர் இஸ்லாமிய மிஷனரிகளினதும் பின்புலத்தில் இயங்குவதால் பாதிக்கப்பட்ட அநாதரவான அடித்தட்டு வர்க்க  முஸ்லீம் சிறுமிகளின் எதிர்கால தொடர் பாதுகாப்பு, நலன் என்பவற்றுக்காக  முஸ்லீம் சமூகத்தில் இருந்து குறிப்பிட்டு சொல்லும் படியாக மனித உரிமை ஆர்வலர்களோ, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களோ, புத்திஜீீவிகளோ, இதர முஸ்லீம் சமூக சேவை நிறுவனங்களோ, மகளிர் அமைப்புகளோ  அமைப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயற்பட இதுவரை முன்வரவில்லை என்பது தான் கேவலமான உண்மை!
(சேயா, மாயா, வித்யா, ஆஷிபா  என்று அந்நிய சமூகங்களிலும், நாடுகளிலும் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் நடைபெறும் போது இலங்கை முஸ்லிம் சமூக கணவான்களும், பெண்டிர்களும் கோரசாக கத்துவது வேறு விடயம்!) 

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26ஆம் திகதி நுகேகொட மஜிஸ்ரேட் (கங்கொடவில) நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

சிறுமிகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்க வலியுறுத்தியும், சிறுமிகள் தாருன் நுஸ்ராவினுள் மீண்டும் தள்ளப்படும் அவலத்தை தடுக்கவும் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை வழக்கு நடைபெறும் வேளையில் நுகேகொட நிதிமன்றத்திற்கு முன்னால் கவன ஈர்ப்பு அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்த மனித உரிமை ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.
தாருன் நுஸ்ரா சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சிறுமிகளை மீண்டும் படுகுழியில் தள்ள கூட்டுச் சதி! கோமாவில் சமூகம்!  தாருன் நுஸ்ரா சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சிறுமிகளை மீண்டும் படுகுழியில் தள்ள கூட்டுச் சதி!  கோமாவில் சமூகம்! Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.