நாம் முதலில் கண்டிக்கவும் விமர்சிக்கவும் வேண்டியவர்கள் யார்?




ரம்ஸான் பண்டிகை பரிசே ஞானசார தேரரின் கைது எனும் தலைப்பில் வீரகேசரி செய்தி வெளியிட்டதை
தொடர்ந்து அந்த பத்திரிகையை குறிவைத்து கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளதை காண்கிறோம்.

இப்படி விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அந்த செய்தியை முழுமையாக வாசித்தார்கள் என்றால் அவர்கள் மிக சொற்ப தொகையினரே. 

அந்த தலைப்பு வீரகேசரியின் சொந்த கருத்தல்ல. பொது பல சேனா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஊடக மாநாட்டில் அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதானந்தனிய நந்த தேரர் கூறிய கருத்தே அது. ஏனைய பல ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

அப்படியானால் நாம் கண்டிக்கவும் விமர்சிக்கவும் வேண்டியவர்கள் யார்? நிச்சயமாக பொது பல சேனாவினர்தான். ஆனால் இங்கே எய்தவன் இருக்க அம்பை நோகுகின்ற கதைதான் நடக்கிறது.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று வீரகேசரிக்கு எதிரான பிரச்சாரத்தில் முன் நிற்கும் அரசியல்வாதிகளும் ஊடகக்காரர்களும் ஞானசார தேரர் சிறை செல்லும் வரை அவருடன் நெருங்கிய தொடர்பை பேணி தேனிலவு கொண்டாடியவர்கள்தான்.

அதனால்தான் பொதுபல சேனாவை விமர்சிக்க தைரியமின்றி செய்தியை பிரசுரித்த ஊடகத்தை வஞ்சம் தீர்க்கிறார்கள்

முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை மீறி ஞானசாரவுடன் பல தடவைகள் பேச்சு நடத்தியவர்கள், முஸ்லிம்களால் ஞானசாரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறு சட்டத்தரணிகளுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் இன்று பொது பல சேனாவை கண்டிக்கத் தயங்குவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அண்மையில் தினக்குரல் வெளியிட்ட செய்தி அவர்களால் இட்டுக்கட்டி எழுதப்பட்டதாகும். வீரகேசரி வெளியிட்ட செய்தி முழுக்க முழுக்க பொது பல சேனாவின் கூற்றாகும். இந்த இலகுவான உண்மையை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் வீணாக சமூகத்தை குழப்பி பொது பல சேனாவுடனான தமது கள்ள உறவை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

முடியுமானால் இந்த கருத்தை கூறிய தேர ருக்கு எதிராக இவர்களால் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா இல்லையேல் ஒரு ஊடக சந்திப்பை நடத்தியாவது பதிலளிக்க முடியுமா? 

- அல்தாப் அகமட்-
நாம் முதலில் கண்டிக்கவும் விமர்சிக்கவும் வேண்டியவர்கள் யார்? நாம் முதலில் கண்டிக்கவும் விமர்சிக்கவும் வேண்டியவர்கள் யார்? Reviewed by Madawala News on June 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.