நான் கண்ட அறபி ..


எஜமான் கொடுமை, சம்பள பிடிப்பு, சினங்கொண்ட அறபிகள் என கெட்டவைகளையே கேட்டு
சலித்துப்போன எமக்கு நான் அறிமுகப்படுத்தப் போகும் மனிதர் வழமைக்கு சற்று மாற்றமானவர்தான்.

தொழில் தேடி கட்டார் நாட்டிற்க்கு வந்த எனக்கு எனது தொழிலோடு எந்தவித அறிமுகம் இல்லாத ஒரு அறபியின் நல்லுள்ளம் செய்த உதவி பற்றி பொது வெளியில் பேச வேண்டும் பேசப்பட வேண்டிய நபர்களில் கலாநிதி ஜாஸிம் சுல்தான் இவரும் ஒருவரே என்ற எண்ணத்தோடு எனது அனுபவத்தை பகிர்கிறேன் .

கட்டாரில் ஒரு நிறுவனத்தில் ஒரு சிறிய பதவியில் தொழில்புறியும் எனக்கு எதேச்சையாக இந்நல்லுத்தின் அறிமுகம் உண்டானது. உண்மையில் சிறியதொரு காரியம் என்னால் ஆக வேண்டி இருந்தது நானும் மனம் கோணாது அச்சிறிய உதவியை அவருக்கு செய்து கொடுத்தேன் அதற்கான தொகையையும் எதிர்பார்ததை விட அதிகமாகவே தந்தார். இ

த்தோடு எனக்கும் அந்நல்லுள்ளத்திற்கும் இடையில் மேலதிக எந்த தொடர்பும் இருக்கவில்லை.

சற்றிலும்எதிர்பாராமல் ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவ்வழைப்பு ஒரு சுப செய்தியே! நான். மேற்சொன்ன நல்லுள்ளம்தான் அது அவரிடம் உள்ள பெறுமதிவாய்ந்த கார் ஒன்றை எடுத்துக்கொள்ளவும் என்பதுவே அச்சுபசெய்தி ஆச்சரியத்துடன் அங்கலாய்த்துப்போனேன்.

காரைப் பரிசாகப் பெரும் அளவிற்கு நான் என்ன கைங்கரியம் செய்தேன் என என்னால் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அத்தோடு முடியவில்லை எனது தந்தை சுகவீனமாக இருந்த போது அவருடைய மருத்துவ செலவுக்கும் மனமுவந்து உதவி செய்தார்.

எனது ஊரில் உள்ள சில ஏழைகள் தொடர்பாக எடுத்துரைத்த போது குடிநீர் இணைப்பு வசதியை பெற்றுத்தருவதற்கான உதவியை பல குடும்பங்களுக்கு செய்தார்.



இது போன்ற உதவிகள் இன்னும் பல. இந்நல்ளுள்த்தின் மூலம் பயன்பெற்றது நான் மட்டுமா என தேடிப்பார்த்தால் இல்லை என்னைப்போல் நூற்றுக்கணக்கானவர்கள் பயன் பெற்றிருக்கின்றார்கள் உதவி என்று கேட்டு வருவோருக்கு இல்லை என்ற பதில் கிடையாது.

இவ்வாறான நல்லுள்ளங்கள் போற்றப்பட வேண்டிய மற்றும் எங்களுடைய துஆக்களில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்களே இந்தப் பாலை வனத்தில் புகழத்தக்க போற்றப்பட வேண்டிய மனிதம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Moulavi Mohammed Rifky (Qatar)
நான் கண்ட அறபி .. நான் கண்ட அறபி .. Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.