கபட நாடகாத்தால் ஒட்டு மொத்த அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களும் தலை குனிந்து இருக்கின்றோம்...


 மாபெரும் மக்கள் சக்தியுடன் இருந்த முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு அரசியல் கருவறுக்கப்பட்டு இருப்பார்
என்று மனக்கண் முன் தோன்றாமல் இல்லை...

2014 முன்னர் இந்த நாட்டின் வீரனாக பார்க்கப்பட்ட ஒருவர் 2014 செப்டம்பர் மாத நிறைவுடன் தலை கீழான அரசியல் நாமத்தை பெறுகின்றார்....
தமிழினத்தின் தேசிய துரோகியாக தமிழ் மக்களால் கருணா அம்மான் எவ்வாறு நோக்கப்பட்டாரோ அதே போன்றது ஒரு மாயத்தோற்றத்தை மகிந்த ராஜபக்சவின் மீதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் மீதும் தெளித்தார்கள்......

இதன் பின்னால் ராஜித, சம்பிக்க ரணவக்கவை விடவும் ஒரு வைரசின் தாக்கம் இருந்துள்ளது....  அது வேறு யாராக இருக்க முடியும்......

2018.6.20 ஒரு பிரபலமான அமைச்சர் பொதுபலசேனாவின் செயலாளரை பார்க்க சென்று ஊடகங்கள் முன்னால் வீராவேசமாக கர்ச்சிக்கிறார்....வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஞானசாரவை வெளியே கொண்டு வருவேன்.........
அவர் வேறு யாருமல்லஅனுராதபுர மாவட்ட அதிகமான இளைஞர்கள் அதுவும் முஸ்லிம் இளைஞர்களின் வாக்கு பலத்தினால் பாராளுமன்றம் சென்று அமைச்சராகி இன்று அவருக்கு வாக்களித்த என் போன்ற வாக்காளரின் இதய இடுக்கில் கரி பூசிய துமிந்த திசானாயக்க

வரலாற்றை சொல்ல வேண்டும்
S.M. சந்திரசேன என்ற அரசியல் வித்தகனிடம் தாக்கு பிடிக்க முடியாமல் தனது தந்தை இழந்த முதலமைச்சர் கதிரை
மகிந்தவின் மீது ஆறா வக்கிரத்தையும் பழிவாங்கும் எண்ணத்தையும் அவருள் தோற்றுவித்திருக்கும்....

ஞானாசார என்ற ஒரு பாம்பினை ஆட்டுவிக்கும் ஊது குழலாக துமிந்தவும் இருந்திருப்பார் என்று பல சந்தேக துகள்கள் என் மத்தியில் இருக்கிறது
1.ஞானசார பொலிசின் பிடியில் இருந்து தப்ப அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் அடைக்கலம் வழங்கிய தகவல்

2.அனுராதபுரத்துக்கு ஞானசார தேரர் வரும் போது அமைச்சரை சந்தித்து பல மணி நேர பேச்சு வார்தை நடத்துவது

3.சமீபத்திய அமைச்சரின் விடுதலைச் சபதம்

 இப்படி எத்தனையோ சொல்லலாம்.இம்முறை நடந்ந உள்ளூராட்சி தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் பல வட்டாரங்களில் ஸ்ரீ.சு.க போட்டியிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்...மகிந்தவின் மீது இருந்த பயமும் ரணிலின் மீதான வெறுப்பும் கணிசமான முஸ்லிம்களி்ன் வாக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்டது...


இன்று  துமிந்த திசானாயகவின் கபட நாடகாத்தால் ஒட்டு மொத்த அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களும் தலை குனிந்து இருக்கின்றோம்...

இன்னும் சில இடங்களில் ஸ்ரீ.பொ.பெ முஸ்லிம் வேட்பாளர்கள் மீது இனவாதத்தை காரணம் காட்டி துண்டு பிரசுரம் முக நூல் வாயிலாக அவர்களது வெற்றியையும் தடுத்தமை சுட்டிக்காட்ட வேண்டும்...

சிங்கள தேசிய வாத வாக்குகளை இழந்த ஸ்ரீ.சு.க மீண்டும் அந்த வாக்குகளை பெற முயல்வது தெளிவாக தெரிகிறது.



ஜனாதிபதியின் சமகால உரைகள்,செயற்பாடுகள், அரசியல் காய் நகர்வுகள் அவர் சார்பான கட்சியின் மட்டமான அரசியலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துவிட்டது....

நேற்று துமிந்த திசானாயக்கவின் ஆதரவாளர் ஒருவரின் பதிவு இப்படி இருந்தது( ஒப்பீட்டளவில் மகிந்த நல்லவர்)

வருங்காலங்களில் இதை விட நல்ல வார்த்தைகள் அவர்களின் நாவுகளால் வெளிப்படட்டும்.....

எனது தலைப்பை விளக்கி முடித்து கொள்கின்றேன்.....மிருகங்கள் பறவைகள் சண்டையில் வௌவால் இரு புறமும் தலைகாட்டி இறுதியில் என்ன நடந்ததோ இந்த நாட்டில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இந்நாட்டில் வௌவாலாக பல ஜந்துக்கள் உலாவரும் அதற்கு அமைச்சர் தலைமைதாங்குவார் .......

                நாம் தெளிவு பெறும் போது அனைத்தும் நம் கையை விட்டு போயிருக்கும்

இது நூற்றாண்டு கடந்த முஸ்லிம்களின் அரசியல் சாசனம்.

Mohamed Ibunu Mohamed Inham  ( இன்ஹாம்)
கபட நாடகாத்தால் ஒட்டு மொத்த அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களும் தலை குனிந்து இருக்கின்றோம்... கபட நாடகாத்தால் ஒட்டு மொத்த அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களும் தலை குனிந்து இருக்கின்றோம்... Reviewed by Madawala News on June 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.