ஸ்ரீலங்கன் விமானத்தில் துஸ்பிரயோக முயற்சி... துபாயில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர் கைது.


துபாய் நாட்டில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் மதுபோதையில் விமானப்
பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்சை பகுதியில் வசித்து வரும் 49 வயதான வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை துபாய் நாட்டில் இருந்த வந்த விமானத்தில் இந்த சந்தேக நபர் வர்த்தக வகுப்பில் பயணம் செய்துள்ளார். விலை அதிகமான மதுபானத்தை கேட்டு, இந்த வர்த்தகர் விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த விமானப் பணிப்பெண் வேறு ஒரு பணிப்பெண்ணிடம் மதுபானத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். மதுபானத்தை கொண்டு வந்த விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர் கையை பிடித்து இழுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கையை பிடித்து இழுத்த போது கையை தட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது சந்தேக நபர் கெட்ட வார்த்தைகளால் பெண்ணை திட்டியுள்ளார்.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வர்த்தகரை கைதுசெய்து விமான நிலைய பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கன் விமானத்தில் துஸ்பிரயோக முயற்சி... துபாயில் இருந்து வந்த இலங்கை வர்த்தகர் கைது. ஸ்ரீலங்கன் விமானத்தில்  துஸ்பிரயோக முயற்சி... துபாயில் இருந்து வந்த இலங்கை  வர்த்தகர் கைது. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5