சிறுபான்மை இளைஞர் ஒருவரை மற்றுமொரு தரப்பினர் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு.


அக்கரைப்பற்று - ஆலையடிவேம்பு பகுதியில் இளைஞரொருவரை சற்றுமுன் அப்பகுதி மக்கள் கட்டி வைத்து தாக்கிய
சம்பவத்தால் தற்பொழுது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 35 வயது மதிக்கத்தக்க தமிழ்  யுவதியொருவரிடம், வேறுமத    இளைஞரொருவர் தகாத முறையில் நடந்து கொண்டதை அவதானித்த மக்களே அவரை தாக்கியதாக அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை, குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளும் எரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் இளைஞரை மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை இளைஞர் ஒருவரை மற்றுமொரு தரப்பினர் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு. சிறுபான்மை இளைஞர் ஒருவரை மற்றுமொரு தரப்பினர் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு. Reviewed by Madawala News on May 25, 2018 Rating: 5