முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி.. அதிரடிப்படை / விமானப்படை இணைந்து மீட்பு.


விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில்
புதைத்து வைத்திருப்பதாக கிடைக்க பெற்ற தகவலில் நேற்றைய தினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீட்டிற்கு சென்ற விமானப்படையினரும் விசேட அதிரடிப்படையினரும்  தர்மபுரம் காவற்துறை, நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்  முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது  சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் புதைக்கப்பட்டிருந்த  வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் கைத் துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த முன்னாள் போராளி முன்னர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் உயர் தரப்புக்களுடன்  மிகவும் நெருக்கமாக இருந்தவர் எனவும் மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பன் அவர்களின் பிரச்சனையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்ய முற்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி.. அதிரடிப்படை / விமானப்படை இணைந்து மீட்பு. முன்னாள் போராளி ஒருவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டி.. அதிரடிப்படை / விமானப்படை இணைந்து மீட்பு. Reviewed by Madawala News on May 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.