பலஸ்தீன் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது.


பலஸ்தீன் மக்கள் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடந்த மே மாதம் 15 ஆம் திகதியுடன் 70 ஆவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.


பலஸ்தீன் மக்கள் தமது பூர்வீக பூமியை இஸ்ரேல் ஆக்கி ரமிப்பாளர்களிடம் இழந்து 7 தசாப்தங்களை கடந்த நிலையில், பலஸ்தீன் மக்களினதும் உலக முஸ்லிம்களினதும் புனிதஸ்தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதரகத்தை கடந்த 15 ஆம் திகதி நிறுவியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஒரு தலைப்பட்சமான இந்த முடிவு பலஸ்தீன் மக்களின் விடுதலையினை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் பலஸ்தீன் மக்களுக்கு நீதியும் நியாயமும் விடுதலையும் கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வரும் ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் இவ்விடயம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சர்வதேச மக்களினதும் உலக நாடுகளினதும் கண்டனத்திற்கு மத்தியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக மேற்கொண்டுவரும்  பலஸ்தீன் மக்களுக்கு எதிரான அக்கிரமிப்பு நடவடிக்கைகள் வன்முறைகள் படுகொலைகள் கண்டிக்கத்தக்கதாகும்.


பலஸ்தீன் மக்கள் தமது பூர்வீகத்தை இழந்து 70 ஆவது வருடத்தில் தமது விடுதலைக்காக  குரல் கொடுப்பதற்கு இருக்கின்ற குறைந்த பட்ச அடிப்படை உரிமையை  கூட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி தமக்கு விடுதலையும் நீதியும் வேண்டி குரல் கொடுத்த மக்கள் 60 பேர் வரை ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச ரீதியாக பல நாடுகளும் தமது கண்டனங்களை வெளிப்படுத்துவருவதுடன் இஸ்ரேலிற்கு எதிரான இராஜதந்திர நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டுவருகின்றனர்.  எனினும் இதுவரை இலங்கை அரசாங்கமோ ஜனாதிபதி அவர்களோ இது தொடர்பில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  குறைந்த பட்சம்  பாலஸ்தீன் மக்கள் மீதான மிலேட்சத்தனமான தாக்குதல்கள் குறித்து தமது அதிருப்தியைக்கூட வெளிக்காட்டாமல் இருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கையின் கடந்த எல்லா அரசாங்கங்களும்  பலஸ்தீன் மக்களின் உரிமைப்போராட்டத்தில் நீதி கிடைக்க வேண்டும், பாலஸ்தீன் மக்களுக்கு விடுதலை கிடைக்கவேண்டும்  என்ற நிலைப்பாட்டையே கொண்டிருத்தன.  இதுவே இலங்கை அரசாங்கத்தின் பொதுவான கொள்கையாகவும்  இருந்து வந்துள்ளது.


மேலும், பலஸ்தீன் மக்களுக்காக சர்வதேச மட்டத்தில் குரல் கொடுத்தும் வந்துள்ளது. எனினும் அண்மைக்காலத்தில் பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இஸ்ரேல் சார்பு நிலையை காட்டி வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக 2015 இல் நாம் அனைவரும் இணைந்து கொண்டு வந்த மைத்திரி ரணில் கூட்டு அரசாங்கம் பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கையின்  மரபு ரீதியான நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.


இலங்கையின்  தற்போதைய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது அதிருப்தியை தெரிவிப்பதுடன் பாலஸ்தீன் விவகாரத்தில் எமது நாட்டின் வழமையான நிலைப்பாட்டையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறது.


உலக சமாதானத்திற்காகவும் பலஸ்தீன் மக்களின்  விடுதலைக்காகவும் குரல் கொடுத்து வரும் இலங்கை மக்களாகிய நாம் எமது அரசாங்கத்தின் மீது இது குறித்த அழுத்தங்களை பிரயோகிக்க முன்வரவேண்டும் எனவும்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

National Front for Good Governance (NFGG)
பலஸ்தீன் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது. பலஸ்தீன் மக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளாதது பெரும் ஏமாற்றத்தை தருகிறது. Reviewed by Madawala News on May 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.