ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள் எவை? அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.


ரமழான் மாதத்திற்கு சிறப்பம்சங்கள் உள்ளனவா? 
ஆம் உள்ளன. அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பை அல்லாஹுதஆலா இந்த மாதத்தில் கடமையாக்கியுள்ளான். 'உங்களில் எவர் அம்மாதத்தை (ரமழானை) அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;' (02:185)
நமது திருமறையான அல்குர்ஆனை இம்மாதத்தில் இறக்கிவைத்துள்ளான். 'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது' (02:185)


ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறப்புமிக்க இரவான லைலத்துல் கத்ரை இம்மாதத்தில் இறக்கி மறைத்து வைத்துள்ளான். 'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்'(05:97)


அல்லாஹ் இம்மாதத்தில் நோன்பு நோற்பதையும்; ,இரவு வணக்கத்தில் ஈடுபடுவதையும் எமது பாவங்களை மன்னிப்பதுற்குக் காரணமாக வைத்துள்ளான்.. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நூல் : சஹீஹுல் புகாரி '1901 )
இம்மாதத்தில் சுவன வாயில் திறக்கப்படுகின்றன, நர வாயில்கள் மூடப்படுகின்றன, தீங்கு விளைவிக்கும் ஷைத்தான்கள் விலங்கிடகப்படுகின்றனர்.


  'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர'; என அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார். (நூல் : சஹீஹுல் புகாரி :1899)
இம்மாதத்த்pல் நோன்பு நோற்பது சென்ற வருடங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாகின்றது.  'இம்மாதத்த்pல் நோன்பு நோற்பது அந்த நோன்பிற்கும் அடுத்த நோன்பிற்கும் இடைப் பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு குற்றப்பரிகாரமாக உள்ளது' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : சஹீஹுல் முஸ்லிம் :233)

இந்த மாதத்தில் இரவு வணக்கத்தில் எந்த மனிதன் இமாமுடன் சேர்ந்து ஈடுபட்டு இமாம் அவர்கள் அவருடைய இடத்திலிருந்து செல்லும் வரை இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றாரோ, அவருக்கு லைலத்துல் கத்ருடைய பாக்கியம் எழுதப்படுகின்றது என ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவுத் ஹதீஸ் இலக்கம் 1370)
இந்த மாதத்தில் எவர் உம்ராவுடைய கடமையை நிறைவேற்றுவாரோ அவருக்கு ஹஜ் செய்ததற்கு சமனான நன்மை கிடைக்கும். 'நபி(ஸல்) அவர்கள் 'ரமழான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமழானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!' எனக் கூறினார்கள்; ;(நூல் : சஹீஹுல் புகாரி :1782)

இம்மாதத்தில் இஃதிகாபுடைய வணக்கம்

சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர் (நூல் : சஹீஹுல் புகாரி :2026)

இம்மாதத்தில் அதிகமாக குர்ஆனை ஓதல், ஒருவர் மற்றவருக்குக் கற்றுக் கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பான அமல்களாக்கப்பட்டுள்ளன. 'ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்' என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ;(நூல் : சஹீஹுல் புகாரி :06)

ரமழானை  எவ்வாறு வரவேற்போம்?


தேக ஆரோக்கியத்துடன் ரமழானை அடைந்து அதன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக பிரார்த்தனைகளை மேற்கொள்ளல் மூலமாக.
ரமழானை எட்டிக்கொள்ளும் பாக்கியம் கிடைத்ததற்காக உள்ளத்தால் பூரிப்படைந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலமாக
ரமழானின் சட்டதிட்டங்களை கற்றுக்கொன்டு அதனை நடைமுறைப்படுத்த முயற்சித்தல் மூலமாக


இந்த ரமழான் மாதத்தில் அனைத்து விதமான பாவத்திலிருந்தும் தன்னை தூய்மைப் படுத்தி அல்லாஹ்வின் அன்பை வேண்டி நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடி சுவர்ககத்தை அடைந்து கொள்ளும் மன உறுதியை ஏற்படுத்திக் கொன்டவர்களாக

அல்லாஹ் எமக்கு வழங்கிய செல்வத்திலுருந்து ஏழை எழியவர்களுக்கு செலவழிப்போம் என்ற எண்ணம் கொண்டவர்களாக
ரமழான்  மாதத்திற்கென்று ஒரு திட்டமிடலை வகுத்து குறித்த நேரத்தில் அல்லாஹ்வை திக்ர் செய்தல், குர்ஆன் பாராயனம் செய்தல், சுன்னத்தான நபிலான இபாதத்துக்களில் ஈடுபடல், இரவு நேர வணக்கத்தில் ஈடுபடல், மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்ளல், நோயாளிகளை சந்தித்தல், உறவினர்களை சந்தித்தல், இன்னும் ஏனைய நன்மையான காரியங்களில் ஈடுபடல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஓரு நேர அட்டவணையைத் தயாரித்தவர்களாக ரமளானை வரவேற்போம்.


             அல்லாஹ் எம் அனைவரையும் ஏற்றுக் கொள்வானாக

     எ.எச்.எம்.மின்ஹாஜ் ஹாலித் முப்தி (காஷிபி)

ரமழான் மாதத்திற்கு உள்ள சிறப்பம்சங்கள் எவை? அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். ரமழான் மாதத்திற்கு உள்ள  சிறப்பம்சங்கள் எவை? அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5