கடுமையாக மோதிக்கொண்ட இரு பாடசாலை மாணவிகள்... வைத்தியசாலையில் அனுமதி.


தம்புள்ளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான பாடசாலையின் மாணவிகள் இருவர்
கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோதலில் காயமடைந்த மாணவி ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் இருவருக்கு இடையிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு மாணவி தான் அணிந்திருந்த பாதணியை கொண்டு மற்ற மாணவியை மிதித்தமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் உள்ள ஏனைய மாணவிகள் மிகவும் போராடி இருவரது சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் மோதலில் காயமடைந்த ஒரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
(படம் அடையாளப்படம் )
கடுமையாக மோதிக்கொண்ட இரு பாடசாலை மாணவிகள்... வைத்தியசாலையில் அனுமதி. கடுமையாக மோதிக்கொண்ட  இரு பாடசாலை மாணவிகள்... வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5