துப்பாக்கி சத்தத்தை துடைத்தெறிந்த மாமனிதன்...!


இன்று வடக்கு கிழக்கில்  துப்பாக்கியின் சத்தம் ஓய்ந்ததன் பின் இயற்கை
மரணங்களைதவிர அகாலமரணங்கள் காணாமல் போய்விட்டதற்கு இந்த மா மனிதனின் தைரியமான முன்னெடுப்புக்களே காரணமாகும்.

1987ம் ஆண்டு முஸ்லிம்களின் உணர்ச்சிகளை புரம்தள்ளிவிட்டு வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களின் அரசியலிருப்பை கேள்விக்குறியாக மாற்றியபோது, அன்றிருந்த எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தார்கள். அப்போது விரும்பினால் இருங்குகள் அல்லாதுவிட்டால் வெளியேறிச் சென்றுவிடுங்கள் என்று கூறிய தலைமைகளும் உண்டு...

யாழ் முஸ்லிம்கள் வழுக்கட்டாயமாக புலிகளினால் வெளியேற்றப்பட்டபோது, தென் இலங்கையிலே "கம்முதாவ" நடத்திக்கொண்டிருந்த தலைமைகளும் உண்டு.

அன்று புலிகளினால் எங்கள் உயிர் உடமைகள் பறிக்கப்பட்டபோது, அன்றிருந்த அரசாங்க தலைவர்களிடம் முஸ்லிம்கள் உதவிகேட்டபோது,  புலி பசித்தால் புல்லையா திண்கும் என்று கேட்ட தலைவர்களும் உண்டு.

2002ம் ஆண்டு புலிகள் நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் உயிர் உடமைகளைப் பகிரங்கமாகவே வேட்டையாடியபோது,அன்றிருந்த இந்த ஒப்பந்தத்தின் கதாநாயகனும், அன்றய பிரதமருமான ரணில் அவர்கள் அந்த அநியாயங்களை என்னெவென்றும் பார்க்கவில்லை. 

பிரதமரான ரணில் அவர்களிடம் அன்று  முஸ்லிம்கள் உதவிகேட்டபோது,எங்கள் ராணுவத்தால் உங்களுக்கு உதவ முடியாதென்றும், அப்படி உதவினால் நாங்கள் செய்த ஒப்பந்தம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்று கூறிய தலைமைகளும் உண்டு...

ஆனால் இந்த தலைவன் அப்படி நடந்துகொள்ளவில்லை,மூதூர் முஸ்லிம்கள் யாழ் முஸ்லிம்களைப்போன்று புலிகளினால்  வெளியேற்றப்பட்டபோது, இந்த தலைவனும் மேல்சொன்ன தலைவர்களைப்போன்று புலிகளின் அட்டூழியங்களை கண்டும் காணாதவர்போல் இருந்திருந்தால் இன்று முஸ்லிம்கள் கிழக்கிலிருந்தும் முற்றாக வெளியேற்றப்பட்டிருப்பார்கள்.  

தினம் தினம் உயிர் இழப்புக்களை சந்தித்த வடகிழக்கு முஸ்லம்கள்  இன்று நிம்மதியாக வாழ்கின்றோம் என்றுசொன்னால், அது இந்த தலைவனின் தைரியத்தினால்தான் என்றால் மிகையாகாது.

எல்லாத் தலைவர்களைப்போலும் நானும் இருந்துவிட்டு போகின்றேன் என்று அவர் அன்று நினைத்திருந்த்ல் இன்று பல ஆயிரம் உயிர்கள் மண்ணறையிலே புதைக்கப்பட்டிருக்கும். 

அதுமட்டுமல்ல எத்தனை தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து தவித்திருப்பார்கள், எத்தனை பேர் கணவனை இழந்து விதவைக்கோலம் பூண்டிருப்பார்கள், எத்தனை இளைஞர்கள் மனக்கோலம் காணாது மண்ணுக்குள் புதையுண்டிருப்பார்கள், எத்தனை பிள்ளைகள் தாய் தகப்பனை இழந்து அநாதையாக மாறியிருப்பார்கள் என்று தெரியாது.

மற்ற தலைவர்களைப்போல் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பயந்து, இந்த தலைவனும் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால்.

இன்று நமது தலை விதியை புலிகள் மாற்றி எழுதியிருப்பார்கள் என்பதே உண்மையாகும்.

அன்று உயிர்கள் மயிர்களைப்போல் பிடுங்கி எறியப்பட்டது, இன்று உயிர்கள் பயிரைப்போல் பத்திரப்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு காரணம் இந்த தலைவன்தான்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...
துப்பாக்கி சத்தத்தை துடைத்தெறிந்த மாமனிதன்...!  துப்பாக்கி சத்தத்தை துடைத்தெறிந்த மாமனிதன்...! Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.