ஹபாயா விவகாரம் ; நிலைப்பாட்டை வெளிப்படுத்த அரசாங்கம் தாமதிக்க கூடாதுதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா
அணி­வதைத் தடுத்­ததன் மூலம் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைக்கு அர­சாங்­கமே தீர்வு வழங்­க­வேண்டும். அர­சாங்கம் தாம­தி­யாது தனது நிலைப்­பாட்­டினைத் தெரி­விக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.
ஸ்ரீ சண்­முகா கல்­லூ­ரியின் 5 முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் கலா­சார உடையான அபா­யா­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­துடன் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘அர­சாங்கப் பாட­சா­லை­களில் ஆசி­ரி­யை­களின் அபாயா தொடர்பில் ஆராய்ந்து தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக கல்­வி­ய­மைச்சு குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. இக் குழு­வுடன் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பிலிருந்து இப்­பி­ரச்­சினை எவ்­வாறு அணு­கப்­ப­டு­கி­றது என்பதை அவதானிக்­க­வேண்டும்.
இலங்­கையில் எத்­த­னையோ தமிழ்த் தேசிய பாட­சா­லைகள் இயங்­கு­கின்­றன. அப்­பா­ட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கடமை புரி­கி­றார்கள். ஆனால் அங்­கெல்லாம் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­க­வில்லை. திரு­கோ­ண­ம­லையில் மாத்­திரம் அபாயா பிரச்­சினை ஏன் உரு­வா­கி­யி­ருக்­கி­றது என்­பது பற்றி ஆரா­யப்­பட வேண்டும்.
அபாயா பிரச்­சினை திடீரென இந்த சந்­தர்ப்­பத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­ன­ணியில் ஏதோ சூழ்ச்சி இருக்­க­வேண்டும். இப்­பி­ரச்­சி­னையை நாம் தமிழ், முஸ்லிம் பிரச்­சி­னை­யாகப் பார்க்­க­வில்லை. திரு­கோ­ண­ம­லையில் பல்­லாண்­டு­கா­ல­மாக தமிழ், முஸ்லிம் மக்கள் எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி சமா­தா­ன­மாக நல்­லி­ணக்­கத்­து­டனே வாழ்ந்து வந்­தி­ருக்­கி­றார்கள். இரு இனத்­தையும் மோத­விட்டுப் பார்ப்­ப­தற்­காக இந்த ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டதா என்றும் சந்­தே­கிக்­க­வேண்­டி­யுள்­ளது.
 அபாயா விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு கல்வி அமைச்சு குழுவொன்றினை நியமித்துள்ளது. அக்குழு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருந்துவிடக்கூடாது. குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்றார்.
-Vidivelli
ஹபாயா விவகாரம் ; நிலைப்பாட்டை வெளிப்படுத்த அரசாங்கம் தாமதிக்க கூடாது  ஹபாயா விவகாரம் ; நிலைப்பாட்டை வெளிப்படுத்த அரசாங்கம் தாமதிக்க கூடாது Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5