72,000 அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.


சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து வௌிநாட்டு நாயணயத்தாள்களுடன் சிங்கப்பூர் செல்ல முற்பட்ட இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 72,000 அமெரிக்க டொலர்களை தமது பயணப் பொதியில் மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 55 வயது மற்றும் 30 வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார்  ஒரு கோடியே 11 இலட்சம்  ருபா என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
01 கோடிக்கும் அதிக பெறுமதியான வௌிநாட்டுப் பணம் கடத்த முற்பட்ட இருவர் கைது
72,000 அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. 72,000 அமெரிக்க டொலர்களை கடத்த முயற்சித்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது. Reviewed by Madawala News on May 11, 2018 Rating: 5