பரவும் மர்ம நோய்.. இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.


தென் மாகாணத்தில் பரவி வரும் மர்மமான நோயினால் கடந்த மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதால்
இந்​த நோய் தொடர்பில், சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மர்மமான நோயானது, அசாதாரணமாக நோயாளிகளின் சுவாச அமைப்பு முறையை பாதிக்கும் என கராபிட்டிய போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் மட்டுமே 5 பேர் உயிரிழக்க காரணமான இந்த மர்மமான நோயை அடையாளம் கண்டுக்கொள்வதற்கான பரிசோதனைகளை சுகாதார அமைச்சின் தேற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மேற்கொண்டு வருவதாக ​அறிவித்துள்ளது.

நிமோனியா நோய்க்கான காய்ச்சல்,சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளே இந்நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாக இண​ங்கானப்பட்டுள்ளதாகவும், இது ஒருவகையான வைரஸினால் ஏற்படும் எனவும் கராபிடிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஜயம்பதி சேனாநயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், இந்த மர்ம நோயிலிருந்து தென் மாகாண மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரவும் மர்ம நோய்.. இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்.  பரவும்  மர்ம நோய்.. இதுவரை 5 பேர் உயிரிழந்தனர். Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.