உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆனது... அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டது.


நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

18 மாவட்டங்களுக்குட்பட்ட ஒரு லட்சத்து 5300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து செல்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மாலா அலவத்துகொட இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மணித்தியாலயங்களாக பெய்த தொடர் மழைக்காரணமாகவே நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதன்காரணமாக களுகங்கையின் தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதனிடையே, ராஜாங்கனை, தெதுருஒயா, பொல்கொல்ல மற்றும் உடவளவை ஆகிய நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறுப்பட்ட அனர்த்தங்களினால் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விஷேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மழையுடன் மீண்டும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என்பன ஏற்படக் கூடும் என்றும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்த நிலையம் பொதுமக்களை வேண்டியுள்ளது.

இதேவேளை, கடும் மழைக்காரணமாக மேலும் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆய்வு பணிமனை இதனை தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தளை, பதுளை, குருநாகல், கம்பஹா, மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கே இந்த புதிய மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாழிறங்கும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பியகம – கடுவலை நகரை இணைக்கும் பாலத்தின் ஒரு மருங்கு போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வினை அடுத்து ஒரு மருங்கு திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆனது... அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆனது...  அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டது. Reviewed by Madawala News on May 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.