மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் பாரிய வர்த்தக நிலையங்கள் வேண்டாம்; அமைதிப் பேரணிக்கு அழைப்பு.


யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் ஜின்னாஹ் வீதியில் அமைந்துள்ள கலீமா ஒழுங்கையில்
“குளோபள் டிரேடிங் சொலூஷன்” நிறுவனம் மினி ரெஸ்டோரன்ட் மற்றும் ஹோட்டல் ஒன்றினை நிர்மானிப்பதற்கு எத்தனித்த சந்தர்ப்பத்தில் அப்பிரதேச முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்; அதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தகக் கட்டிடத்தின் நிர்மானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும் தாம் சட்ட ரீதியான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கின்ற காரணத்தினால் பொதுமக்களின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது நிர்மானப் பணிகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்துவருகின்றமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேச தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து “ யாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பாரிய வர்த்தகக் கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு எதிரான தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்பு” ஒன்றினை ஏற்படுத்தி அதனூடாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வர்த்தக நோக்கிலான கட்டிடங்கள் வேண்டாம் என்னும் தலைப்பில் அமைதிப் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் 25-05-2018 வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு குறித்த பேரணி யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம், ஜின்னா வீதியின், கலீமா ஒழுங்கை சந்திக்கு அருகாமையில் நடாத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள், ஹோட்டல்; மதுபான நிலையங்கள்; களியாட்ட நிலையங்கள் வேண்டாம் என்னும் அமைப்பில் இடம்பெறும் இவ்வமைதிப் பேரணிக்கு மக்கள் நலன் விரும்பும் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் பெருந்திரளான பிரதேச மக்கள் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்

மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் பாரிய வர்த்தக நிலையங்கள் வேண்டாம்; அமைதிப் பேரணிக்கு அழைப்பு. மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் பாரிய வர்த்தக நிலையங்கள் வேண்டாம்; அமைதிப் பேரணிக்கு அழைப்பு. Reviewed by Madawala News on May 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.