ஷாமிலாவின் "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு"


"மறைக்கப்பட்ட சொற்களின் அழகு" ஒரு பெண் படைப்பாளியின் கவிதை நூல் இது .முக நூலில் பொம்புள என்ற
ஒரு தொடரை நியாங்களை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார் ஷாமிலா ஷரீப்.

 .22/04/2018 ஞாயிறு மாலை 4.மணிக்கு கொழும்பு -10 அல் ஹிதாயா மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில்  இவரது "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு " என்ற நூலின் வெளியீடு இடம்பெற  இருக்கிறது.

இந்த நிகழ்வு பேராசிரியர். திரு.சந்திரசேகர் தலைமையில் நடை பெற இருப்பதுதான் இந்த நூலின் முதற் பிரதியை இலக்கிய புரவலர் ஹாஷிம் உமர்  அவர்கள் பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

ஒரு பெண் சமூக முன்னேற்றத்தின் அச்சாணி . அவள் முன்னேறும் போது அவளை நாம் உற்சாகப்படுத்த வேண்டும் அதே போல அடையாளம் காட்டவும் வேண்டும்.
இவரை பற்றி சொல்வதென்றால் தனது கருத்தை ஆணித்தரமாக சொல்லும் ஒரு பெண் .இவருக்கு அமைந்திருக்கும் 
துணை இவரின் பொன்னாடை. ஒரு வண்டியில் கட்டப்பட குதிரைகள் வேவ்வேறு திசையில் ஓடினால் அது ஊர் சென்று சேராது.அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒரே திசையில் பயணிப்பதால் ஷாமிலா ஷரீப் க்கு தன் சார்பாக தெளிவை ஏற்படுத்த சிரமப் பட தேவையே இல்லை.

ஆசிரியராக தனது பயணத்தை தொடரும் இவர் மாணவர்களை கவிதை, கட்டுரை,சிறுகதை, பேச்சு,நாடகம் என பல்துறைகளிலும் பங்கு பெறச்செய்து பல வெற்றிகளைப்பெற்றுக்கொடுத்துள்ளார். இவரை வளவாளராக பயன்படுத்தி
கல்விஅமைச்சின் பாடசாலை மட்ட ஆசிரிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்காக மாதிரி கற்பித்தல் படமாக்கப்பட்டு ஆசிரியர்வாண்மை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு கற்பித்தல் உபகரணமாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

 இவருடைய படைப்பிலக்கிய பயணத்தினை பொருத்தவரை இவரது முதல் கவிதைத்தொகுதி "நிலவின் கீறல்கள்" .இரண்டாவது தொகுதி "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு" பூவரசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.இவரது சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பும் விரைவில் வெளிவரவுள்ளது.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு(இலங்கை),உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு(காயல் பட்டணம்,இந்தியா),சர்வேதசக்கருத்தரங்கு-பெண்ணியத்தின் புதிய போக்குகள் ( கேரளா   பல்கலைக்கழகம்- இந்தியா ) ஊடறுவும் மலையகப்பெண்களும் இலக்கியச்சந்திப்பு (கொட்டக்கலை, இலங்கை)ஊடறுவும் மலேசியப்பெண்களும் இலக்கிய சந்திப்பு (பினாங்கு,மலேசியா) உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடு (இலங்கை) போன்ற மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய  மாநாட்டில் ஷாமிலாவின் பங்களிப்பு வெகுவாக இருந்தது என மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான திரு . அஷ்ரஃப் ஷிஹாப்தீன் அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வுப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கல்வியியலாய்வில் குறுகியகால பயிற்சி நெறி கிடைக்க ப்பெற்று பூர்த்தி செய்து இப்போது செய்யுள் இலக்கியம் தொடர்பான செயல்வழி ஆய்விலும் போர் இலக்கியம் தொடர்பான இலக்கிய ஆய்விலும் இவரது பணி தொடர்கிறது.

திருமணம் மற்றும் குடும்பம்: 2011 ஏப்ரல் 29 இல் ஆவணப்பட இயக்குனராக தொழில் புரிந்த முஹம்மட் முஸ்டீன் என்பவரை கரம்பிடிததார், றோயல் வெடிங் டே எனப்படுகின்ற இளவரசர் வில்லியம் கேட் திருமண பந்தத்தில் இனைந்து கொண்டதும் இதே தினம் தான் என்பதும் குறிபிடத் தக்கது.மூன்றரை வயதுடைய மகன்  உமர் காலித் புதிதாய் பிரகாசம் தரும் மகள் சைனப் ஆகியோர் இவரது நிறைவான குடும்பம்.

பிள்ளைகள் குடும்பம் என பரப்பரப்பாக இருக்கும் இவரது நூல் வெளியீடு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சிமாரா அலி
ஷாமிலாவின் "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு" ஷாமிலாவின் "மறைக்கப்பட்ட சொற்களின் அழகு" Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.