2 கோடியை வேலை செய்த வங்கியிலேயே அபேஸ் செய்த பெண் சிக்கினார். #இலங்கை


பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய பெண் ஒருவர் கேகாலை பிரதேசத்தில்
வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

வங்கியால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி சந்தேகநபரான பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரான பெண் டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்ட போதிலும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

எவ்வாறாயினும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகநபர் கேகாலை பிரதேசத்தில் தங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த பெண் அந்த வங்கியில் 2,29,41,349 ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
2 கோடியை வேலை செய்த வங்கியிலேயே அபேஸ் செய்த பெண் சிக்கினார். #இலங்கை 2 கோடியை வேலை செய்த வங்கியிலேயே அபேஸ் செய்த பெண் சிக்கினார். #இலங்கை Reviewed by Euro Fashions on April 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.