யாழில் தமிழ் முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்.


-பாறுக் ஷிஹான்-
முஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குதல்களை  கண்டித்து  யாழ் பஸ் நிலையம் முன்பாக
கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று(13) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு  தமிழ் சிங்கள முஸ்லீம் உறவை வலுப்படுத்துங்கள்  இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் என  பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டத்த்தில் ஈடுபட்டவர்கள் கோஷமெழுப்பினர்.

இப்போராட்டத்தை   சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பு மற் றும் சமூக மேம்பாட்டு இணையம் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு புதிய ஐன நாயக இளைஞர் முன்னணி ஆகிய 4  அமைப்புகள் இணைந்து  நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழ் முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம். யாழில் தமிழ் முஸ்லிம் அமைப்புகள் இணைந்து கண்டி முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம். Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5