கொஞ்சம் அவகாசம் தாங்க... இனவாத மற்றும் வெறுப்பு கருத்துக்களை நீக்கி விடுகிறோம். : இலங்கையிடம் பேஸ்புக்.


பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இனவாத கருத்துக்களை நீக்க பேஸ்புக் நிறுவனம்
இலங்கை அரசாங்கத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது.

சிங்கள மொழி பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக குறித்த கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

சிங்கள மொழி அறிவுகொண்ட போதுமானளவு பணியாளர்கள் தற்போது தமது நிறுவனத்தில் இல்லை என பேஸ்புக் கூறியுள்ளது.

மேலும்  பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இனமுறுகலை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது என இலங்கை அரசு பேஸ்புக்கிடம் தெரிவித்துள்ளது.

இந்த  விடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொஞ்சம் அவகாசம் தாங்க... இனவாத மற்றும் வெறுப்பு கருத்துக்களை நீக்கி விடுகிறோம். : இலங்கையிடம் பேஸ்புக். கொஞ்சம் அவகாசம் தாங்க... இனவாத மற்றும் வெறுப்பு  கருத்துக்களை நீக்கி விடுகிறோம். : இலங்கையிடம் பேஸ்புக். Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5