கண்டியில் நடந்த கலவரமும் பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்களும்... Must Read.


சென்ற மாதம் நமது மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் சில நிகழச்சிகளில் கலந்துகொள்ள நான் அனுராதபுரம்
சென்றிருந்தேன். நான் பயணம் செய்த முச்சக்கர வண்டியின் சாரதி காலி லபுதுவ பிரதேசத்தை சேர்ந்த  சுமார் 32 வயது மதிக்கத்தக்க அனைவரிடமும் மிக சகஜமாக பழகும் திருணமாகாத ஒரு நபர்.

அனுராதபுரவில் நடந்த நமது மாவட்ட அணிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் பகல் உணவுக்காக சோறு கொண்டுவரப்பட்டது ஒரு முஸ்லிம் ஹோட்டலலில் இருந்து. என்னுடன் வந்த சாரதி  பகல் உணவை உட்கொண்டது பெரும் தயக்கத்துடனும், பயத்துடனும் என்பதனை என்னால் பார்க்க முடிந்தது.

பகல் உணவை உட்கொண்டு விட்டு இன்னுமொரு கலந்துரையாடலுக்காக எனது பயணத்தை முச்சக்கர வண்டி சாரதியுடன் தொடர்ந்தேன்.  உணவு உட்கொள்ள தயங்கியது தொடர்பில் சாரதியிடம் நான் விசாரித்தேன்.

மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்து (வதபெதி) தொடர்பில் தான் நம்பியுள்ள அனைத்து விடயங்களையும் அவ்விளைஞன்  என்னிடம் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போனான்.

அவன் பேச்சை நிறுத்தியதும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் மருந்து (வதபெதி) தொடர்பில் உண்மை  தன்மையை முழுமையாக முச்சக்கர வண்டி சாரதிக்கு நான் விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

எனது விளக்கத்தை நிதானமாக உள்வாங்கிய முச்சக்கர வண்டி சாரதி

இந்த (வதபெதி) தொடர்பில் எந்தளவுக்கு மடமையான கருத்தில் தான் இருந்ததாக மனப்பூர்வமாக உணர்ந்தது மட்டுமல்லாமல். அநுராதபுரத்திலிருந்து திரும்பி வரும் போது எமது அனுராதபுர மாவட்ட முஸ்லிம் தலைவரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் மன்னிப்பும் கேட்டான்.

நான் இந்த விடயத்தை இங்கே குறிப்பிடக் காரணம்

இந்த வதபெஹெத் தொடர்பிலான வதந்திகள் மிக அண்மையில் பரப்பப்பட தொடங்கியவை அல்ல. கடந்த ஜந்து அல்லது ஆறு வருடங்களாக தொடர்ந்து இந்த வதந்திகள் சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் மக்கள் இவ்வாறு வந்திகள் பரப்பப்படுவது தொடர்பில் அறிந்திருந்தும். அதற்கெதிரான அல்லது அதற்கு விளக்கமளிக்க பயத்தின் காரணமாக முன்வரவில்லை. முஸ்லிம் தலைவர்கள் கூட இதனை கண்டும் காணதது போல் மௌனமாக மறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நாட்டின் மதத்தலைவர்கள் இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு வதந்திகள் தொடர்பில் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த முன்வராமல் மௌனம் காத்தனர்.

வதபெஹெத்  வதந்தியில் எந்த அடிப்படை உண்மையுமில்லை என்பதனை நாடடின் படித்த உயர் மட்டத்தினர் அறிந்திருந்தாலும் அது தொடர்பில் மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த அவர்களும் முன்வரவில்லை.

இந்த வதபெஹெத் வதந்தி பொய்யானது என்பது தொடர்பில் நாட்டின் வைத்தியத்துறையினர், இராசனயவியல் துறையினருக்கு மக்களுக்கு தெளிவுபடுத்தும் சந்தர்ப்பம் இருந்தும் அவர்கள் அந்தக் பணியை செய்ய முன்வராமல் பொடுபோக்காகவே இருந்தனர்.

ஊடகவியலாளர்கள், நாட்டின் பிரபல  ஊடகங்கள் அனைத்தும் இந்த முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள். இவர்கள் கூட பின்கதவால் முஸ்லிம் விரோத பிரச்சாரங்களுக்கு உதவினார்களே தவிர மக்களுக்கு உண்மையை விளக்கி தெளிவுபடுத்த முன்வராமல் கள்ள மௌனம் சாதித்தார்கள் .

நல்லாட்சி அரசு கூட பெரும் அழிவை கொண்டு வரும் இந்த நாசகார வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்து வைத்திருந்தனர். நாட்டில் வாழும் எந்த மக்கள் பிரிவினருக்கு எதிராகவும் துவேசத்தை, வெறுப்பை தூண்டும் வகையிலான பிரச்சாரங்களுக்கு வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்காமல் அவற்றை தடை செய்வது அரசின் மிகப் பிரதானமான பொறுப்பு. இப்பொறுப்பை செய்தவற்கான அத்தனை வளங்களும், வசதிகளும் நல்லாட்சி அரசுக்கு இருந்தும்  நல்லாட்சி அரசு கூட இந்த முஸ்லிம் விரோத பிரச்சாராங்கைள, வேலைத்திட்டங்களையும் தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.ஒரு பெரஹரா வரும் முன் அதற்கு முன்னால் சாட்டைகளை நிலத்தில் அடித்தபடி ஒரு நாட்டியக் குழு முன்னால் நடனமாடிக் கொண்டே முன்னால் வருவார்கள்.


கண்டியில் நடந்த கலவரமானது அந்த பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்ஙகள் வருவது போன்றது.
பெரஹரா பின்னால் வந்துகொண்டிருக்கிறது

பெரஹரா இதனை விட பாரியது.

முஸ்லிம்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் இப்பாரிய பெரஹரவை (ஆபத்தை) நிறுத்தவதற்கான ஒரேயொரு வழி சிங்கள சமூகத்தவரின் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள நச்சுக் கருத்துக்களை
நீக்குவதன் மூலம் மாத்திரமே.


09 மார்ச் 2018 ராவய பத்திரிகையில் கண்டியில் நடந்த கலவரம் தொடர்பில்
ஒரு விரிவான கட்டுரையை வரைந்துள்ளார்.

இலங்கையின் வரலாறு,
இலங்கை மக்களின் வாழ்க்கைய நிலை
இலங்கை சமூகத்தின் போக்குகள் தொடர்பில்
ஆழந்த பரிச்சயமுள்ள
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் அய்வன்.


இலங்கையின் அரசியல் போக்கு இலங்கையின் சமூக போக்குகள் தொடர்பில்
இவர் முன்கூட்டியே எச்சரித்த பல விடயங்கள் சமூகத்தில் நடந்தேறியிருக்கின்றன.

இவர் தனது ஆழந்த அனுபவத்தை வைத்தே  தனது கருத்துக்களை முன்வைக்கிறார் என்பதனை விக்டர் அய்வனை தொடர்ந்து வாசித்து வருபவர்கள் புரிந்துகொள்வார்கள்.

விக்டர் அய்வன் தனது கட்டுரையில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வரவிருக்கும் பாரியதொரு அழிவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக விளக்கி
அதற்கான சில தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.


முஸ்லிம் சமூகம் இந்த அபாய அறிவிப்பை மிகவும் சீரியஸாக எடுத்து
தமது எதிர்காலம் தொடர்பில் திட்டமிடுமா?

அல்லது
 மாவனல்லை
தர்காடவுன்
ஜின்தொட்ட
அம்பாறை
கலவரங்கள் நடந்த போது Gas போத்தல் போல் அந்த நேரத்தில்  மட்டும் பொங்கி எழுந்து விட்டு ஓரிரு மாதங்களில் இவை அனைத்தையும் மறந்து விட்டு இக்கட்டுரையில் வருவது போல்

83 கலவரைத்தை போல் இன்னொரு கலவரம் வரும் வரை
ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லுமா?
கண்டியில் நடந்த கலவரமும் பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்களும்... Must Read. கண்டியில் நடந்த கலவரமும் பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்களும்... Must Read. Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5