யாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை.


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறி லங்கா
சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளன.

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான 27 வட்டாரங்களுக்கான உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். விகிதாசார உறுப்பினர்களின் பெயர்களைத் தற்போது கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.

இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ந.லோகதயாளன் மற்றும் பெண் உறுப்பினரான பி.நளினா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ப.யோகேஸ்வரி , ச.அனுசியா , நா.ஜெயந்தினி , மு.றெமீடியஸ் , கு.செல்வவடிவேல் , கா.வேலும்மயிலும் ( ஜெகன் ) , கி.டேனியன் , து.இளங்கோ ( றீகன்) ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சி.குலேந்திர்ராசா , வி.விஜயதர்சினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.மணிவண்ணன் , த.அஜந்தா , சி.சுகந்தினி , தி.சுபாசினி ஆகியோரின் பெயர்களும் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

மேற்படி  உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தவிர   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றில் இணைந்து முஸ்லீம் வேட்பாளர்கள் நேரடியாகவும் பட்டியல் உறுப்பினராகவும் இணைந்து அக்கட்சிகளுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை. யாழ்.மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியலில் முஸ்லீம்களிற்கு இடமில்லை. Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.