குண்டுகளுடன் தொடர்புடையவர் சடலமாக மீட்பு. sl


மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட குண்டுகளுடன் தொடர்புடையவரென தேடப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடந்த சில நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதுடைய ஆரையம்பதி கதிர்காமர் வீதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் பிரியராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரையம்பதியில் மீட்கப்பட்ட குண்டு தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுகளுடன் தொடர்புடையவர் சடலமாக மீட்பு. sl குண்டுகளுடன் தொடர்புடையவர் சடலமாக மீட்பு. sl Reviewed by Euro Fashions on March 09, 2018 Rating: 5