(படங்கள்) இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கையை கண்டித்து கனடாவில் ஆர்பாட்டம்.


இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கையை கண்டித்தும் அமைதியை வலியுறுத்தி
கனடா ஆல்பர்ட்டா மாகணத்தின் கல்கரி நகரில் கவனயீர்ப்பு போராட்டம்.

இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று நண்பகல் ( 10 - 03-2018) நடைப்பெற்றது

கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

படங்கள் Ameer Faizan
(படங்கள்) இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கையை கண்டித்து கனடாவில் ஆர்பாட்டம். (படங்கள்) இலங்கை முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கையை கண்டித்து கனடாவில் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5