ஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட இனவெறி வன்முறை தேசத்துரோகமாகும்.


 -மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
அம்பாரையில் அரங்கேறிய அராஜகம் ICCPR சட்டத்தின் கீழ் கையாளப்படாமை, தனிப்பட்ட விவகாரங்களாக
முறைப்பாடுகள் செய்யப்பட்டு காவல்துறை சட்டம் மற்றும் நீதித் துறையால் கையாளப் படுகின்றமை அவற்றை அரசு அனுமதித்து வேடிக்கை பார்க்கின்றமை இன மத வெறி சக்திகளை மென்மேலும் ஊக்குவிக்கின்ற அணுகுமுறையாகும்.

அதில் தொடர்புபட்ட காடையர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ICCPR எனும் சர்வதேச நியமங்களிற்கேற்ப வரையப்பட்ட கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
மாறாக, தனித்தனி வன்முறைகளாக ஐந்து சம்பவங்களாக வழக்குகள் பதியப் பட்டுள்ளன.
தனித்தனியாக பாதிக்கப் பட்ட தரப்புக்கள மீது அழுத்தம் கொடுக்கப்படும் விதத்தில் சட்டம் கையாளப் பட்டுள்ளது.
ஒரு கடையின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ICCPR சட்டம் பொலிசாரால் கவனத்தில் கொள்ளப் படவில்லை.
வீடியோ காணொளிகளை பரிசீலனை செய்து காட்டு மிராண்டிகளை கைது செய்ய நடவடிக்கைகள எடுக்கப் படவில்லை.
வழமைபோல் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் களத்திற்கு விஜயம் செய்தார்கள், சிலர் வரவுமில்லை, பார்வையிட்டார்கள்.
ஆக்ரோஷமாக அறிக்கைகள் விட்டார்கள் மீண்டும் ஒரு தம்புள்ளையாக, அளுத்கமையாக, ஜின்தொடையாக விவகாரம் சமாதானமாக அல்லது இழுத்தடிப்பாக மூடி மறைக்கப் பட்டு மறக்கடிக்கப் படுவதற்கான அறிகுறிகள் அத்தனையும் தென்படுகின்றன.
இனிவரும் காலங்களிலும் இதே நாடகங்கள் தான் அரங்கேற்றப் படப் போகின்றன என்றால் முஸ்லிம்களது பாதுகாப்பிற்கு அரசோ, எமது தலைவர்கள் என்று அழைக்கப் படுகின்றவர்களோ, சட்டம் ஒழுங்கு அமைச்சோ, சட்டம் மற்றும் நீதித் துறையோ எத்தகைய உத்தரவாதத்தை தரப் போகின்றன?
அம்பாறை மஸ்ஜிதை அவர்கள் கட்டித் தரலாம், ஓரிரு கடைகளுக்கும் சிறு நஷ்டஈடு கொடுக்கலாம், இதனை அரசியலாக மாற்றி சிலர் படை பட்டாளங்களுடன் வருகை தந்து தந்து சொந்த செலவில் அல்லது அரச செலவில் செய்து தரலாம்!
ஆனால் நாமும் இந்த தேசத்தின் பிரஜைகள், நாமும் வரியிறுப்பாளர்கள், இவையெல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டும், அதற்கு ஆரவாரமான வருகைகள் விளம்பரங்கள் தந்து மக்களை மடையர்களாக்க எவரும் எத்தணிக்க வேண்டியதில்லை.
ஒப்பீட்டளவில் அம்பாரையில் பொளதீக இழப்புகள் குறைவு அதனை சரிசெய்ய சவாரிகள் விளம்பரங்கள் தருவது ஒன்றும் பெரிய காரியமல்ல, தனிப்பட்ட தகராருகளாக விவகாரத்தை சிறுமைப்படுத்தி ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளமை பொளதீக இழப்புகளை விட இந்த அரசு முஸ்லிம்கள் மீது நடத்தியள்ள பாரிய பாரபட்சமாகும்.
அளுத்கமை ஜிந்தோட்டை உற்பட்ட தம்புள்ளை என நாட்டில் கிடப்பில் உள்ள அனைத்து விடயங்களிற்கும் தீர்வு இன்றேல் இனியும் ஆங்காங்கு அரங்கேற்றப் படுமென நாம் அஞ்சுகின்ற அடாவடித் தனங்களிற்கு யார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப் போகிறார்கள்?
அம்பாரையில் அரங்கேறிய அராஜகம் ICCPR சட்டத்தின் கீழ் கையாளப்படாமை, தனிப்பட்ட விவகாரங்களாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு காவல்துறை சட்டம் மற்றும் நீதித் துறையால் கையாளப் படுகின்றமை அவற்றை அரசு அனுமதித்து வேடிக்கை பார்க்கின்றமை இன மத வெறி சக்திகளை மென்மேலும் ஊக்குவிக்கின்ற அணுகுமுறையாகும்.

ஜனநாயக அகிம்சை வழிமுறைகளையும் அமைதி சமாதானத்தையும் பேச்சுவாரத்தை புரிந்துணர்வுகளையும் நம்பியிருக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம்களது இருப்பிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடுக்கப் பட்டிருக்கின்றமை முஸ்லிம் அரசியலின் தாயகத்தில் மிகவும் தெளிவாகவே தெரிய வந்திருக்கின்றது.
ஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட இனவெறி வன்முறை தேசத்துரோகமாகும். ஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட இனவெறி வன்முறை தேசத்துரோகமாகும். Reviewed by Madawala News on March 03, 2018 Rating: 5