காலத்தின் தேவை நிதானம்!


-எம்.எம்.ஏ.ஸமட்-
மாவனல்ல, அளுத்கம, கிந்தோட்ட என இனவெறியாட்டத்தின் அரங்கேற்றடங்கள் தொடர்
அத்தியாயங்களாகப் பதியப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரகாலத்திற்குள் அம்பாறையிலும், திகன மற்றும் தெல்தெனியவிலும் பேரினவாத்தின் கொடூரம்; அரங்கேறி சொத்துடமைகளை அழித்த ஓர் உயிரையும் பலிகொண்டியிருக்கிறது.

அரச காவலர்களின் பாதுகாப்புக்கு மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள  இக்கொலைவெறியாட்டம் ஒவ்வொரு ஈமானிய உள்ளங்களையும் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருக்கிறது. அழிவுகளின் சிதைவுகளை நேரிலும், காணொலிக் காட்சிகள் வாயிலாகலும் காணும் ஒவ்வொரு சமூக உணர்வு கொண்ட முஸ்லிமும் சமூகத்திற்காக என்ன செய்யலாம் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்;. இந்நிகழ்வுகள் அத்தகையவர்களது உள்ளத்தை உறக்கச் செய்யாது தடுத்துக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், முஸ்லிம்கள் இந்நாட்டில் பரம்பரையாக வாழ வேணடும். மாறாக, இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ ஓட முடியாது. இம்மண்ணில் வாழ்ந்து இம்மண்ணிலே மரணிக்கவுள்ள முஸ்லிம்கள் எதிர்கால சந்ததிகளின் இருப்பையும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வையும்   உறுதிப்படுத்த வேண்டிய தேவையையும், அதற்கான முறையான திட்டமிடல்களையும்; மேற்கொள்ளப்பட வேண்டியது பொறுப்பைச் சுமந்தவர்களாக உள்ளனர். இப்பொறுப்பு இக்காலத்தின் அவசிய, அவசரத் தேவையுமாகும் என்பதனால் ஒவ்வொரு விடயத்தையும், அறிவு பூர்வமாகவும் மிக நிதானத்துடன்  முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

நிதானத்துடனான, அறிவுபூர்வமான நகர்வுகள்  கோழைத்தனமானதென்றோ அல்லது அடிமையத்தனமானதென்ரோ கருதப்படலாகாது. கம்பை எடுத்தோம், அடித்தோம், தகர்த்தோம், முடித்தோம் என்ற செயற்பாடுகள் உடனடி நடவடிக்கையாக இருந்தாலும,; அவை புத்திசாதுரியமானதாகவுள்ளனவா என்பது குறித்து  ஒவ்வொருவரும் மீள்வாசிப்புக்குட்படுத்துவது முக்கியமாகும்.

முஸ்லிம்களின் சமகாலம்
உலகில் இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான செயற்பாடுகள் தொடராக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கும் செயற்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வழிப்பு நடவடிக்கைகள் அன்று முதல் இன்றுவரை சர்வதேச அரங்கிலும் இலங்கையிலும் கூட பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பாசிஷ நடவடிக்கைகளின்; தொடரில்; இஸ்லாத்தின் பெயர் தாங்கிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களைக் கொண்டழிப்பதுடன்  முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள், உளவியல் ரீதியாகவும், ஊடகப் பயங்கரவாதத்தினூடாகவும், நேரடி ஆயுத மோதல்களின் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்களின் உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் உலகளவில் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அத்தோடு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் உலகளவில் கொச்சைப்படுத்துவதையும் காண முடிகிறது, பயங்கரவாதிகளாகவும், அடிப்படைவாதிகளாகவும,; மதவெறியர்களாகவும், கொலைகாரர்களாகவும் முஸ்லிம்கள் உலகிற்குக் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான நிலையை உருவாக்கியுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்கள் எந்த நாடுகளிலெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம்  இஸ்லாத்தையும,; முஸ்லிம்களையும் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்களையும் அழிப்பதற்கான பாசிஷவாத நிகழ்ச்சி நிரல்களை பல்வேறு முகவர்களினூடாக முன்னெடுத்து வருகின்றனர்.

சிரியாவின் 4000,000 இலட்சம் முஸ்லிம்கள் வாழும் கௌடா நகரில் மழலைகள், சிறார்கள், பெண்கள். வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்  ஏறக்குறைய ஒரு மாதகாலமாக ரஷிய படைகளின் ஆதரவுடன் சிரிய அரசபடைகளினால் கொல்லப்;பட்டுக் கொண்டிருக்கிறார்கள், உணவின்றி, உடையின்றி, மருந்துங்கள் இன்றி உயிர்வாழ்வுக்காக பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லி;ம்களைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கும் திட்டங்களையும், முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கும் திட்டங்களையும் சர்வதேச ரீதியாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சக்திகள்  வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்,  இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீதான பாஷிசவாதிகளின் குறி நீண்ட காலங்களுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்தாலும் 2012ஆம் ஆண்டின் பின்னர் இக்குறி வீரியம் கொண்டுள்ளது. இக்குறியின் முதல் கட்டத் திட்டம்தான் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தொழிப்பதாகும். ஒரு சமூகத்தின் முக்கிய சமூக் கூறு பொருளாதாரமாகும். பொருளாதாரத்தை அழித்தால் அச்சமூகத்தை ஏனையவற்றிலிருந்து இலகுவாக முடக்கி விடலாம்; என்பதை நன்றாக அறிந்தும் தெரிந்தும் கொண்டுதான் மாவனல்லை முதல் திகன வரை போரினவாதம் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. .

கடும்போக்காளர்களினால் சிங்கள மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகின்ற முஸ்லிம்கள் குறித்த எதிர்மறைப் பிரச்சாரங்களினால் பெரும்பான்மை மக்கள் மத்தியிலுள்ள இனவாத சிந்தனை கொண்ட இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இரு சமூகங்களுக்கிடையில் அல்லது இரு சமூக அங்கத்தவர்களுக்கிடையில் இடம்பெறுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை இனப்பிரச்சினையாக உருவாக்கி அழிவு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் இதன்; பின்னணியில் பல சக்திகள் செயற்படுவதை முஸ்லிம்கள் தங்களது புரிதலுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.

இலங்கையின் ஏறக்குறைய 2 கோடி 30 இலட்சம் மக்கள் தொகையில் 9.7 வீதம் முஸ்லிம்கள்  செறிவாகவும், சிதறியும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு வாழும் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் இம்மண்ணுக்கு விசுவாசமாகவே வாழ்ந்து வருகிறார்கள். இந்நாட்டின் அத்தனை வளர்ச்சியிலும்; முஸ்லிம்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இம்மண்ணுக்காக உயிர்த்தியாகமும் புரிந்;திருக்கிறார்கள். அவ்வாறு தேசப்பற்றோடு வாழும் முஸ்லிம்களை கடும்போக்கு இனவாதிகள் வந்தேறு குடிகள் எனக் கொச்சைப்படுத்துகிறார்;கள். இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்கள். இவ்வாறு அறை கூவல் விடுகின்றன கடும்போக்காளர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைப்பற்றியும் அவர்களால் இந்நாட்டுக்காக புரியப்பட்ட தியாகங்கள் குறித்தும் நிதானத்துடன் தெளிபடுத்துவது அவசியமாகும். அதற்கான வழிகளை ஆரம்பிப்பது சகவாழ்வை நேசிக்கின்ற பெரும்பான்மை மக்களிடம் முஸ்லிம்கள் தொடர்பான யதார்த்தைப் புடம்போடச் செய்யும்.

தேசப்பற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களை இந்நாட்டுடன் விசுவாசமற்றவர்கள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், இந்நாட்டின் தொள்பொருள் பிரதேசங்களையும,; வனங்களையும்  கபளிகரம் செய்து வாழ்கின்றவர்கள் என யதார்த்திற்கு முரணான பதிவுகளை ஏற்படுத்துவதற்கான காரணமென்ன என்பதை ஆராய வேண்டிய தேவையும் முஸ்லிம்களுக்குள்ளது. நமது செயற்பாடுகளிலுள்ள வலுக்களும், பிழைகளும், நாம் பெரும்பான்மை மக்கள் மத்தியில்  வாழும் சிறுபான்மையினர் என்ற உணர்வு மறத்தலும்,  மதநிந்தனைக்கும் எம்மீதான பெறுப்புப் பேச்சுக்களுக்கும் காரணமாகவுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும். இந்நிலையில்தான் தொடரான அழிவு அரங்கேற்றங்களை பேரினவாத கடும்போக்காளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறையிலும் திகனயிலும் வெறியாட்டம்
இருப்பினும், நடந்தேறுகின்ற நிகழ்வுகள் வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டதைத்தான் உணர்த்துகிறது. 'சிங்கில்' கொத்து ரொட்டி என அம்பாறை முஸ்லிம் ஹோட்டல் முதலாளி கூறியதை சிங்கள கொத்து என்று விளங்கிய ஒரு சிங்கள நபர் அவற்றை பெரிதுபடுத்தி சிங்களவர்களின் இனவிருத்தியை தடை செய்வதற்கான மாத்திரரை கலந்து கொத்து ரொட்டி விற்கப்படுகிறது எனப் போலிப்  பிரச்சாரத்தை முன்னெடுத்து அதன்; அடிப்படையில் கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி இரவோடு இரவாக அம்பாறையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளையும், பள்ளிவால்களையும் அடித்து நொருக்கி தீவைத்து அரங்கேட்டிய இனவெறியாட்டத்திற்கான நியாயம் கிடைக்காத நிலையில், வழிதறிய பழக்கமுடைய முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட சிங்கள வாலிபனின் உயிர் இழப்பை காரணங்காட்டி ஒட்டுமொத்த திகன வாழ் முஸ்லிம்களின் சொத்து, செல்வங்களை கடந்த திங்கள் கிழமை அழித்தொழித்திருக்கிறார்கள் என்றால் இதன் பின்னணி என்னவென்பதையும், நாட்டின் அரச, அரசியல் சூழலில் காணப்படுகின்ற ஸ்தீரமற்ற நிலைமை குறித்தும் நாம் சிந்திக்கக் கடமைப்பற்றுள்ளோம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒரு அரசாங்கம் குறித்து அல்லது அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நாட்டு மக்கள் சிந்திக்காமல் இருப்பதற்காக அந்நாட்டில் ஏதாவதொரு பிரச்சினைi; மக்கள் மத்தியில் தொடராப போசப்பட வேண்டும் என்பது அரசியல் உளவியலினூடாக நாட்டு மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும். கடந்த  அரசாங்கம் இந்நடவடிக்கையை கச்சிதமாக நிறைவேற்றி வந்திருப்பதாக உளவியலாளர்களினால் கடந்த காலங்களில் கூறப்பட்டது.

தற்போது அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கின்ற அரசியல் நெருக்கடி குறித்தான கருத்தாடல்களை திசைமாற்றுவதற்கானதொரு செயற்பாடாக அம்பாறையிலும், திகனனையிலும் பௌத்த சிங்கள கடும்போக்காளர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கோடிடுவதான சந்தேகங்கள் மக்கள் மத்தியில் மேலெழுந்துள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

தனிநபர்களுக்கிடையே இடம்பெறுகின்ற பிரச்சினைகளை தீர்;ப்பதற்கு அவை குறித்த சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமும் சட்ட மன்றங்களும் உள்ள நிலையில், பேரினவாத கடும்போக்காளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துகொண்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழித்தும், சூரையாடியும், வீடுகளுக்கு தீ வைத்தும், பள்ளிவாசல்களை அடித்து நொருக்கியும் என  தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற சம்பவங்களை சட்டம் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது அல்லது சட்டத்தைப் பாதுகாக்கின்றவர்களே சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகிறார்கள் என்பது எத்தகைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் முன்னெடுக்ப்படுகிறது என்பதை முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளதுடன் மிக நிதானத்துடன் தமது நடவடிக்கைகளை முன்நகர்தத வேண்டிய தேவையுமுள்ளதுஎன்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இந்நிலையில், பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீதும் சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், 1988ஆம் ஆண்டு தென்னிலங்கையை அச்சத்துக்குள் அடக்கி வைத்துக்கொண்டு புரட்சி செய்த மக்கள் விடுதலை முன்னணி இளைஞர்களையும், கிழக்கைப் பகுதியளவிலும் வடக்கின் பெரும்பகுதியையும் தன்காட்டுப்பாட்டில்; வைத்திருந்த படைப்பலம் பொறுந்திய விடுதலைப் புலிகளையும் அடக்கி, ஒடுக்கி, அழித்த படைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ள அரசாங்கத்தினால் சிறு எண்ணிக்கை கொண்ட கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்க முடியாமல் இருப்பதன் மர்மம் என்ன? என்ற கேள்வி சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் மாத்திரமல்ல பெரும்பான்மை சமூகத்திலுள்ள பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
இருப்பினும், இக்கேள்விக்கான பதிலை சட்டம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை  அம்பாறை மற்றும் திகனயில் இடம்பெற்றுள்ள வெறியாட்டம் முற்றாக இழக்கச் செய்திருக்கிறது. தங்களது பாதுகாப்பை தாங்களாகவே உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நிரூபித்திருக்கிறது.
ஏனெனில், சம்பவம் நடைபெறுவதற்கு முன்கூட்டியே முஸ்லிம்கள் கடைகளை அடைத்து, பள்ளிவாசல்களை மூடி பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு பாதுகாப்புத்தரப்பினர் திகன பிரதேச முஸ்லிம்களை அறிவுறுத்தியும் குறித்த தினத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தாது அலட்சியம் செய்ததன் மறுமம் என்ன? அதுமாத்திரமின்றி, பாதுகாப்பு கடமையிலிருந்த காவலர்கள் தங்களது கடமையை உதாசீனம் செய்து பக்கச்சார்பாக நடந்து கொண்டதன் பின்னணியென்ன? என்ற கேள்விகள் பரவலாக சமூ வலைத்தளங்களில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உயிரும், உடமைகளும், இருப்பும், உரிமையும் கேள்விக்குட்பட்டுள்ள நிலையில், அடக்குமுறை மூக்கின் நுனிவரை வந்துவிட்ட சூழலில், சட்ட ஆட்சியானது இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தை  பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கட்டியெழுப்பப்படுவது அவசியமாகும். சட்டம் அதன் கடமையைக் செய்யும் வரை  சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் நிதானமாகச் செயற்படுவது முக்கிய கடப்பாடாகும்.


இறைவனின் பாதுகாப்பும் நிதானமும்
சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இனவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையாக 1915ல் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான  கலவரமும் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜுலைக் கலவரமும்; வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது.
அழிவுகள் பலவற்றை எதிர்கொள்ளச் செய்த இவ்விரு ஆண்டுகளிலும் இடம்பெற்ற இவ்வினக்கலவரங்கள் அக்காலங்களிலிருந்த அரச இயந்திரங்களின்; ஆசிர்வாதங்களுடனேயே நடைபெற்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறானதொரு நிலைமை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு சமகாலத்தில் ஒவ்வொரு முஸ்லிமையும் சார்ந்தது. இந்நாட்டின் சட்டத்தின் மீது இறுதி வரை நம்பிக்கை வைத்து சட்டத்தினூடாக நமது இருப்பையும,; சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுப்பது ஒவ்வொரு துறைசார்ந்தோரின் பொறுப்பாகவுள்ளது.
பிரபல்யத்தையே மூலதனமாகக் கொண்டு செயற்படும் அரசியல் தலைமைகள் மற்றும் தனிநபர்களிடம் இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பொறுப்பை முழுமையாக வழங்காது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சமகால இச்சூழ்நிலை தொடர்பில் விழிப்படைவதும், விழிப்புணர்வூட்டப்படுவதும் அவசியமாகும்.
ஏனெனில், நிதானமிழந்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நம்மை இனவாதத்தின் தீயிற்கு இரையாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இனவாதத்திற்கு எதிராக நாம் முன்னெடுக்கின்ற எத்தகைய நடவடிக்கையாக இருந்தாலும், அதன் சமகால, எதிர்கால விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை சுய விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகவுள்ளது. ஹர்த்தால் போன்ற நமது எதிர் நடவடிக்களையும் சுயவிசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.
ஒரு நாளைக்கு கடைகளை அடைத்து நாம் இனவாதித்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை பல நாட்கள் அக்கடைகளை திறக்க முடியாத நிலைக்கு ஆளாக்கி விடக் கூடாது. இந்நெருக்கடியான இந்நாட்களை வீரம் பேசும் நாட்களாகவும,; தனிப்பட்ட அல்லது சங்க, கட்சி அரசியலுக்கு விளம்பரங்களைத் தேடும் நாட்களாகவும்; மாற்றிக்கொள்ளாமல் இந்நாட்களில் எவ்வாறு நமது பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று குர்ஆனும், நபி வழியும் வலியுறுத்தியிருக்கிறதோ அவ்வழியை மேற்கொண்டு நமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, இதற்காக நாம் எடுக்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் மிக நிதானத்துடனும், அறிவுபூர்வமாகவும், கட்சி, கொள்கை, கோட்பாடு, பிரதேச, பிராந்திய வேறுபாடுகளுக்கப்பால் வேற்றுமையில் ஒன்றுமை கண்டவர்களாக ஒன்றுபட்டு முன்னெடுப்பதற்கு வல்ல இறைவன் நமக்கு துணைநிற்பானாக!
விடிவெள்ளி – 08.03.2018

காலத்தின் தேவை நிதானம்! காலத்தின் தேவை நிதானம்! Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5