கண்டி மாவட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். சம்பவங்களின் பின்னணியில் வௌி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.


கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் வௌி மாவட்டங்களில்
இருந்து வந்தவர்கள் அடங்குவதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

இன்று அதிகாலை மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இராணுவத்தளபதி தெரிவித்ததாவது,

நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். சில பகுதிகளில் சிறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். வௌி மாவட்டங்களில் இருந்து வந்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்த பகுதிகளில் நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம். இது அநீதியான போராட்டம். துரதிர்ஷ்டவசமாக சில தேரர்களும் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர்.

என தெரிவித்தார்.

மேலும், அமைதியின்மையின் போது சேதமாக்கப்பட்ட உடைமைகளை விரைவில் புனரமைத்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி தமக்கும் கடற்படைத் தளபதிக்கும் உத்தரவிட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
கண்டி மாவட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம். சம்பவங்களின் பின்னணியில் வௌி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கண்டி மாவட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளோம்.  சம்பவங்களின் பின்னணியில் வௌி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.